ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் வெடித்த பின் சீனாவுக்கான இந்திய மருத்துவக் குழுவுடன் ஷந்தாராம் Kotnis அவர்கள் சீனாவுக்கு வந்தார். அவரும் அவரது குழுவினரும் சீனாவின் ஹுபெய் மாநிலத்தின் ஹைகோ, யிச்சான், சிச்சுவான் மாநிலத்தின் ச்சுன்ச்சிங் முதலிய இடங்களில் பணிப் புரிந்தனர். ஆபத்தை பொருட்படுத்தாமல் காயமடைந்த போர் வீரர்களுக்கு ஷந்தாராம் Kotnis சிகிச்சையளித்தார். பின்னர் அளவுக்கு மீறி களைத்து நோய்வாய்பட்டு மரணமடைந்தார். பிரிந்த அவருடைய உயிர் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன போராட்டத் தளத்தில் என்றுமே நிலைத்து நின்றுவிட்டது. தங்கைமார்களின் நினைவில் வீரர் ஷந்தாராம் Kotnis மிதமான அன்பான சகோதரராவார். ஐந்தாவது தங்கை வத்சலா கூறியதாவது.
அண்ணன் சீனாவுக்கு சென்ற போது எனக்கு 9 வயது. தங்கைமார் மீது அவர் அன்பு காட்டினார். அவர் அடிக்கடி எனக்கு எழுதக் கற்றுக்கொடுத்தார். அவருடன் இருந்த போது மகிழ்ச்சியும் இன்பமுமாக உணர்ந்தேன் என்றார் அவர்.
அவரது தங்கைமார்கள் வர்ணித்தது போல் ஷந்தாராம் Kotnis மிதமான பண்பு நலனுள்ளவர். நியாயமான பொறுப்பு அவருக்கு உண்டு. ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் அவர் சீன மக்களுடன் ஆழமாக பழகினார். அவர் பணிபுரிந்த சீனாவுக்கான இந்திய மருத்துவக் குழுவின் உறுப்பினர்களும் சீன மக்களின் நம்பமான நண்பர்களாவர். மருத்துவக் குழுவில் மூத்த மருத்துவர் B.K.Basu நாட்டுக்குத் திரும்பிய பின் சீனா பற்றி பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வெளியிட்டார். மருத்துவக் குழுவின் தலைவர் திரு M.Atal அவர்களும் நாட்டுக்குத் திரும்பிய பின் பல்வேறு இடங்களில் இந்திய மக்களுக்கு சீன மக்களின் விடுதலை லட்சியம் பற்றி பரப்புரை செய்தார். சீனாவை மேலும் கூடுதலாக அறிந்து கொள்ளும் வகையில் அவர் இந்திய மக்கள் குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு உதவி செய்தார். மருத்துவர் M.Atalவின் பேரன் Navin Atal குழந்தை காலத்திலிருந்தே தாத்தாவின் பாதிப்பில் வளர்ந்தார். இது அவருக்கு பெருமை. அவர் கூறியதாவது.