மருத்துவர் ஷாந்தாராம் கோட்னிஸ் மற்றும் சீனாவுக்கான இந்திய மருத்துவ குழுவின் எழுச்சியை தொடர்ந்து வெளிக்கொணரும் வகையில் சீனாவும் இந்தியாவும் 2008ம் ஆண்டில் கூட்டு மருத்துவக் குழு என்ற ஒன்றுக்கு ஒன்று உதவும் நடவடிக்கையை மேற்கொண்டன. திறமைமிக்க இளம் மருத்துவர்கள் இடம் பெறும் கூட்டு மருத்துவ அணிகள் ஒன்று மற்ற தரப்புக்கு அனுப்பப்பட்டன. வறிய பிரதேசங்களுக்கு இந்த குழுக்கள் சென்று அங்கு வாழும் மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தன. இந்திய மருத்துவர் எஸ் அனுராதா குழுவுடன் சீனாவின் ஹொபெய் மாநிலத்தின் தாங் மாவட்டத்துக்கு சென்று இலவச சிகிச்சையில் பங்கு எடுத்தார். இந்த அனுபவத்தை மீளாய்வு செய்யும் போது அவர் கூறியதாவது.
நான் இந்திய மருத்துவக் குழுவுடன் சேர்ந்து பெய்சிங், சிச்சுவான், தான் மாவட்டம் முதலிய இடங்களுக்குச் சென்றேன். மருத்துவர் ஷாந்தாராம் கோட்னிஸ் அப்போது தங்கியிருந்த இடத்தை பார்வையிட்டேன். அங்குள்ள மக்களை சென்று பார்த்தேன். அவர்கள் மிகவும் உற்சாகத்துடன் எங்களை உபசரித்தனர். சீனப் பயணம் எங்கள் மனதில் அருமையாக பதிந்துவிட்டது என்று அவர் கூறினார்.
சீன மக்களுக்கு சிகிச்சை சேவையளித்த போது சீனா பற்றி அனுராதா ஆழமாக அறிந்து கொண்டார். அவரும் சீன மருத்துவர்கள் மற்றும் சீன மக்களுடன் ஆழ்ந்த நட்பை உருவாக்கினார். மருத்துவர் என்ற முறையில் அவர் மருத்துவர் ஷந்தாராம் Kotnisஇன் அனுபவங்களை பின்பற்றி சீன-இந்திய நட்புக்கு பங்கு ஆற்றும் விருப்பத்தை தெரிவித்தார்.