குழ்தைக்காலத்தில் இருந்த போது நான் மருத்துவர் ஷந்தாராம் Kotnis வாழ்க்கைப் பின்னணியை நன்றாக அறிந்து கொண்டேன். மருத்துவக் குழு அதன் கடமையை முடித்த பின் அவர் தனியாக சீனாவில் தங்கியிருந்ததோடு சீனப் பெண்ணை திருமணம் செய்தார். அவர் குழந்தை பெற்றார். அவரது முழு வாழ்க்கையும் அவரது உயிரும் சீனாவின் விடுதலை லட்சியத்துக்காக அர்பணிக்கப்பட்டன. இரு நாட்டு நட்புக்கு அவர் மாபெரும் பங்கு ஆற்றினார் என்று மருத்துவர் நவீன் அட்டல் தெரிவித்தார்.
இந்தியாவில் சீனாவுக்கான இந்திய மருத்துவக் குழு மற்றும் மருத்துவர் ஷந்தாராம் Kotnisஇன் பெயர்கள் புகழ் பெற்றவை. இந்திய நோய் கட்டுப்பாட்டுக் கழகத்தின் ஆய்வு முனைவர் Ravi Dharon மருத்துவர் ஷந்தாராம் Kotnisயின் மகத்தான வாழ்க்கையை மிகவும் பாராட்டுகிறார். இந்தியாவிலான மருத்துவர் ஷந்தாராம் Kotnisஇன் செல்வாக்கு பற்றி குறிப்பிட்ட போது அவர் கூறியதாவது.
அவர் இந்தியாவில் உயர்வாக மதிப்பிடுகிறார். அவருடைய கதையை அனைத்து இந்தியர்களும் அறிந்து கொண்டுள்ளனர். இரு நாட்டுறவுக்கு அவர் சிறந்த பங்காற்றினார். தற்போதைய இளைஞர்கள் அவருடைய வாழ்க்கை வரலாற்றை அவ்வளவு அறிந்து கொண்டிருக்கவில்லை என்பது வருத்தம் தான். ஆகவே பத்து சர்வதேச நண்பர்கள் தேர்வு செய்யும் நடவடிக்கை மருத்துவர் ஷந்தாராம் Kotnisஇன் சர்வதேச எழுச்சியை மேலும் அதிகமானவர்கள் அறிந்து கொள்ள துணை புரியும் என்று அவர் கூறினார்.
தற்போது இந்தியாவின் பெங்களூருவில் வெளிநாட்டுச் செய்தியேட்டில் பணிபுரிகின்ற திரு பஃரூக் கூறியதாவது.
எமது செய்தி ஊடகங்கள் சீன-இந்திய உறவில் மிகவும் கவனம் செலுத்துகின்றன. ஆனால் சில நுண்ணுணர்வுடைய கூற்றுகள் அடிக்கடி தோன்றுவது வருத்தமான விடயமாகும். இந்த நிலைமையில் மருத்துவர் ஷந்தாராம் Kotnisஇன் மகத்தான எழுச்சியை வெளிக்கொணரப் பாடுபடுவது மிகவும் முக்கியமாக காணப்படுகின்றது என்று அவர் கூறினார்.