கலை.......வணக்கம் நேயர்களே. புத்தாண்டு துவங்கிய பின் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி மூலம் உங்களை சந்திப்பது இது முதல் முறையாகும்.
கிளீடஸ்.......ஆமாம். கடந்த ஓராண்டில் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியை உருவாக்குவதற்குப் பல நேயர்கள் உதவிக்கரம் நீட்டியதுடன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி இனிமையாகவும் கேட்கத்தக்க வடிவதிலும் இயங்க உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது.
கலை.......ஆகவே இவ்வாண்டில் சிறந்த அனுபவங்களை நிலைநிறுத்தி நேயர் நண்பர்களாகிய உங்களுடன் தொடர்ந்து ஒத்துழைக்க விரும்புகின்றோம்.
கிளீடஸ்.......சரி. கலை சீனாவில் இயங்கிவருகின்ற உயர்வேக இருப்புப் பாதையின் வளர்ச்சி பற்றி வெளிநாட்டவர்கள் எப்படி மதிப்பீடு செய்கின்றனர் என்பது இன்றைய நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக இருக்கலாமே.
கலை.......நல்ல யோசனை. அப்படியிருந்தால் முதலில் சீனாவின் உயர்வேக இருப்புப் பாதையின் கட்டுமானம் பற்றி இந்தியாவில் என்ன எதிரொலிப்பு பற்றி பார்க்கலாம்.
கிளீடஸ்.......அறிந்த வரை இந்தியாவில் செய்தி ஊடகங்கள் மட்டுமல்ல மற்ற துறையினரும் சீனாவின் உயர்வேக இருப்புப் பாதைப் போக்குவரத்தில் மிகவும் கவனம் செலுத்துகின்றனர்.
கலை.......எடுத்துக்காட்டுகள் ஏதாவது சொல்லுங்கள்.
கிளீடஸ்.......எடுத்துக்காட்டாக மனித குலத்தின் வளர்ச்சி பற்றி நீண்டகாலமாக ஆராய்ந்துள்ள நிபுணர் லிபராண்அவர்களில் ஒருவராவார்.
கலை.......நிபுணர் லிபராண்இப்போது இந்தியாவில் எந்த துறையில் வேலை செய்கிறார்?
கிளீடஸ்.......அவர் இப்போது இந்தியாவிலுள்ள இந்திய உறை விட மையம் என்ற நிறுவனத்தின் தலைவராக பணிபுரிகின்றார். 56 வயதான அவர் நகரமயமாக்கம், போக்குவரத்து மற்றும் எரியாற்றல் பயன்பாடு முதலிய துறைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
கலை.......புதுதில்லியிலுள்ள சீன வானொலி செய்தியாளர் ஹு வேய் மிங் அறிமுகப்படுத்திய படி நிபுணர் லிபராண்கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் வளர்ச்சியடைந்து வருகின்ற உயர்வேக இருப்புப் பாதையை மிகவும் அக்கறையுடன் கவனித்துள்ளார்.
கிளீடஸ்.......ஆமாம். சீனாவில் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த பின் சீனாவின் இருப்புப் பாதைக் கட்டுமானம் வேகமாக வளர்ந்துள்ளது. 1996ம் ஆண்டு சீனாவின் இருப்புப் பாதையளவு இந்தியாவில் இருந்ததை தாண்டியுள்ளது. 2001ம் ஆண்டு சீனாவில் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரமயமாக்க இருப்புப் பாதைகளின் நீளம் இந்தியாவில் இருப்பதை தாண்டியுள்ளது என்று நிபுணர் லிபராண் குறிப்பிட்டார்.