கலை.......பத்து ஆண்டுகளுக்கு பின் உலகில் எஹ்கும் காண முடியாத உயர்வேக இருப்புப் பாதை வலைப்பின்னல் சீனாவில் அடிப்படையில் உருவாகியுள்ளது. இந்த இருப்புப் பாதைக் கட்டுமானத்தின் மூலம் உலகின் இருப்புப் பாதைத் திட்டப்பணியின் தொழில் நுட்பத்தின் மிக உயர்ந்த நிலையை சீனா எட்டியுள்ளது.
கிளீடஸ்....... மனித குலத்தின் வளர்ச்சிப் பிரச்சினையில் நீண்டகாலமாக ஆராய்ந்துள்ள நிபுணரான திரு லிபராண் ஒரு கருத்துக்கு மிகவும் ஆமோதிப்பை தெரிவித்தார். அதாவது பொருளாதாரத்தை வளர்க்கும் போது முதலில் போக்குவரத்தை வளர்த்தாக வேண்டும்.
கலை....... இருப்புப் பாதையின் வளர்ச்சி சமூகத்தின் வளர்ச்சி மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டுடன் நேரடி தொடர்புடையது. அப்படிதானே?
கிளீடஸ்.......ஆமாம். இது பற்றி திரு லிபராண் தெரிவித்த கருத்து இதே.
சுற்றுலா பயணம் மக்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பகுதியாகும். இதன் மூலம் மகிழ்ச்சியான அனுபவங்களை பெறலாம். இருப்புப் பாதையின் செல்வாக்கு நாட்டின் பல்வேறு இடங்களை இணைப்பதாகும். அது செல்லும் இடங்களில் அவ்விடங்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சி தூண்டப்படும். அதேவேளையில் இருப்புப் பாதையின் இயக்கம் நாட்டின் ஒன்றிணைப்புக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
கலை.......அவருடைய கருத்துக்களை நான் வரவேற்கிறேன்.
கிளீடஸ்.......சீனாவின் உயர்வேக இருப்புப் பாதையின் வலைப்பின்னல் கட்டுமானம் பற்றி இந்திய செய்தி ஊடகங்கள் மிகவும் கவனம் செலுத்தியுள்ளதாக நிபுணர் லிபராண் கூறினார்.
கலை.......சீனா அதன் ஆற்றல் அனைத்தையும் குவித்து இருப்புப் பாதைக் கட்டுமானத்தில் பயன்படுத்தியது பற்றி திரு லிபராண் எதாவது புரிதல் மற்றும் ஆமோதிப்பை தெரிவித்தாரா?
கிளீடஸ்.......இது பற்றி அவர் கூறியதாவது.
கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் உயர்வேக இருப்புப் பாதை வியப்பளிக்கும் வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. ஷாங்காய் மாநகரில் உயர்வேக தொடர் வண்டி மூலம் பயணம் மேற்கொண்டேன். இருப்புப் பாதை சீன நகரவாசிகளின் வாழ்க்கையில் முக்கிய பகுதியாகியுள்ளதை நான் கண்டேன்.
கலை.......இருப்புப் பாதையின் வளர்ச்சி எப்படி நாட்டின் சமூகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக் குறிக்கோளுடன் இணைப்பது என்பது குறித்து அவருடைய கருத்து என்ன?
கிளீடஸ்.......மக்களின் தேவையை நிறைவு செய்யும் நோக்கத்தைப் பார்த்தால் இருப்புப் பாதையின் வேகம் மிக முக்கியமானதல்ல. இருப்புப் பாதைப் போக்குவரத்தின் ஒருங்கிணைப்பை உத்தரவாதம் செய்வது மேலும் முக்கியமானது. அதன் வேகத்தை விரைவுப்படுத்தும் வேளையில் எரியாற்றல் பயன்பாட்டு விகிதத்தை உயர்த்துவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.