கலை.......இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையில் நாட்டின் நிலைமை கிட்டத்தட்ட ஓரே சூழ்நிலையில் உள்ளது. நகரமயமாக்கம் மற்றும் அடிப்படை வசதிக் கட்டுமானத்தின் போது பல ஒத்த பிரச்சிகனைகளை இவ்விரண்டு நாடுகளும் எதிர்நோக்கியுள்ளன. எடுத்துக்காட்டாக எரியாற்றல், சுற்றுச் சூழல், வாழ்க்கைத் தரம் முதலிய துறைகளில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல நிலவுகின்றன. போக்குவரத்துப் பிரச்சினையானது எரியாற்றல் பயன்பாடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, வாழ்க்கை மேம்பாடு ஆகியவற்றுடன் நேரடியாக இணைக்கப்படுகின்றது. சரி இருப்புப் பாதை கட்டுமானத்துக்கு சீனா முன்னுரிமை வழங்குவது பற்றி நிபுணர் லிபராணின் கருத்து என்ன?
கிளீடஸ்.......சுற்றுச் சூழல் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இருப்புப் பாதைப் போக்குவரத்தை வளர்க்கும் போது வேகத்தை மட்டுமல்ல சுற்றுச் சூழல் பாதுகாப்பின் மேம்பாட்டையும் கவனிக்க வேண்டும். நகரங்களுக்கிடை போக்குவரத்துத் தொகுதியை வடிவமைக்கும் போது இது சுற்றுச் சூழலுக்கு நன்மை தருமா என்பதையும் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் இழப்பையும் மாசுபாட்டையும் கூடியளவில் குறைப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நிபுணர் லிபராண் கருத்து தெரிவித்தார்.
கலை.......இந்தியாவில் இருப்புப் பாதையை வளர்ப்பது பற்றி நிபுணர் லிபராணின் கருத்து என்ன?
கிளீடஸ்.......இந்தியா இருப்புப் பாதையை வளர்த்து மேம்படுத்தக் கூடிய நாடாகும். இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் நிலவியல் நிலைமை சமமட்டமாக காணப்படுகின்றது. நகரங்களையும் கிராமப்புறங்களையும் இணைப்பதில் இருப்புப் பாதை வலைப்பின்னல் சீரான பயன் தருகிறது. அதேவேளையில் வெவ்வேறான மொழிகள், பழக்கவழக்கங்கள், மதங்கள் ஆகியவற்றைக் கொண்ட மக்களிடை புரிந்துணர்வை அதிகரிக்கும் தொடர்பாக இருப்புப் பாதை திகழ்கின்றது.
கலை.......இந்திய அரசு வெளியிட்ட வளர்ச்சித் திட்டத்தின் படி இந்தியா அடிப்படை வசதிகளின் கட்டுமானத்துக்கான நிதி ஒதுக்கீட்டை பெருமளவில் அதிகரிக்கும். இவற்றில் போக்குவரத்துக் கட்டுமானம் முக்கிய பகுதியாக சேர்க்கப்படும். அதேவேளையில் எரியாற்றலை சிக்கனப்படுத்தும் இருப்புப் பாதை வலைப்பின்னலை வளர்ப்பது இந்தியா அறிவித்த 2020ம் ஆண்டில் பசுங்கூட வாயு வெளியேற்றத்தை 20 விழுக்காடாக குறைக்கும் இலக்கை நனவாக்குவதற்கு எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது?
கிளீடஸ்.......ஒவ்வொரு நாட்டைப் பொறுத்தவரை, சுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது மிகவும் தேவையானது. இந்த இலக்கை நிறைவேற்ற போதியளவில் ஒத்துழைத்து அதற்காக பாடுபட வேண்டும். எடுத்துக்காட்டாக பசுங்கூட வாயு வெளியேற்றத்தை 20 விழுக்காடாக குறைப்பதென்ற இலக்கை பார்த்தால் இதற்காக நாம் முயற்சியுடன் செயல்பட வேண்டும். ஆகவே நாட்டின் முயற்சி மூலம் இந்த இலக்கு நனவாக்கப்பட முடியும்.
கலை....... சீனாவில் இயங்கிவருகின்ற உயர்வேக இருப்புப் பாதையின் வளர்ச்சி பற்றி இந்தியாவிலுள்ள இந்திய உறை விட மையத்தின் தலைவராக பணிபுரியும் நிபுணர் லிபராண் தெரிவித்த கருத்துக்களை கேட்டீர்கள்.
கிளீடஸ்.......அடுத்த வாரம் சனிக்கிழமையில் மீண்டும் சந்திப்போம்.
கலை.......இத்துடன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடைகின்றது. வணக்கம் நேயர்கள்.