கிளீட்டஸ்........ தாகூரின் படைப்புகளில், அவர்"கீதாஞ்சலி"யை தேர்வு செய்ததன் காரணம் என்ன?
கலை...... "கீதாஞ்சலி"கவிதைத் தொகுப்பு நோபல் இலக்கிய பரிசு பெற்ற படைப்பாக திகழ்கின்றது. தற்கால இலக்கிய வரலாற்றில் இந்தப் படைப்பு மிக அதிக செல்வாக்கை கொண்டுள்ளது. "கீதாஞ்சலி" கவிதைத் தொகுப்பில் தாகூர் தாம் மிகவும் நம்பிக்கை கொண்ட கடவுளுக்கு முன்னால் தனது அரசியல் நிலைப்பாடு, தத்துவக் கண்ணோட்டம், இலக்கியத் தத்துவம் ஆகியவற்றையும் தனது மகிழ்ச்சி மற்றும் வேதனையையும் விளக்கிக் கூறுகிறார். தாம் விரும்பிய மன்னராட்சியையும் அவர் இந்த கவிதைத் தொகுப்பில் வர்ணித்துள்ளார்.
கிளீட்டஸ்........ஆகவே "கீதாஞ்சலி" கவிதைத் தொகுப்பை படிக்கும் போது தாகூரின் சிந்தனையை ஆழமாக அறிந்து கொள்ளலாம். தவிரவும், இது சீனாவில் வெளிநாட்டு இலக்கியத்தை மொழியாக்குவதற்கு ஒரு மாதிரியாக கருதப்படலாம்.
கலை...... ஆமாம். Zeng qiong தவிர, liu lian என்பவரும் சீனாவில் தாகூரின் படைப்புகள் பற்றிய ஆய்வில், இன்னொரு திறமைசாலியாக அழைக்கப்படுகின்றார்.
கிளீட்டஸ்........அவர் செய்த ஆய்வு அல்லது முயற்சி என்ன? கலை......தாகூரின் கவிதைகளில் சிவ பெருமானின் தோற்றம் பற்றி அவர் ஆய்வுக் கட்டுரை எழுதினார். 2007ம் ஆண்டு இந்த கட்டுரையின் மூலம் அவர் முதுகலை பட்டம் பெற்றார்.
கிளீட்டஸ்........ சிவ பெருமான் இந்தியாவின் மதத்தத்துவங்களின் சிக்கலான இருவேறு தன்மைகளை வெளிப்படுத்தும் கடவுளாகும். சிவ கடவுளுக்கு நல்ல குணம், கோபம், உற்சாகம் உற்சாகமின்மை ஆகியவை உண்டு. அவர் ஆக்கவும் செய்வார், அழிக்கவும் செய்வார்.
கலை......ஆமாம். சிவ பெருமானை தனது ஆய்வு மாதிரியாக தேர்வுசெய்வது பற்றி liu lian கூறியதாவது.
கிளீட்டஸ்........ சிவ பெருமான் பற்றிய எண்ணங்கள் தாகூரின் மனதில் மையமாக உள்ளன. படைப்பாளர் குறிப்பாக கவிஞராகிய தாகூர் வாழ்க்கையை வெளிப்படுத்தும் போது தனது சிந்தனையை கற்பனையுடன் இணைப்பது இயல்பே. தாகூரின் கவிதைகளில் மனதின் உள்ளார்ந்த உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்தப்படுகின்றது. ஆகவே அவரது கவிதைகளில் தாம் கொண்டுள்ள இரட்டைத் தன்மை மற்றும் முரண்பாட்டுக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. சமூகம் பற்றி மனநிறைவின்மையை தெரிவிக்கும் போது சிவ பெருமானின் கருத்துக்களைப் பயன்படுத்தினார். சிவ பெருமானின் கூற்றை மேற்கோள்காட்டி சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றிய தனது கருத்துகளை வெளிப்படுத்த தாகூர் முயன்றார் என்று liu lian விவரித்தார்.
கலை......தாகூர் ஒரு தலைசிறந்த சமூகவாதியாவார். அவரது சமூக நடைமுறைகள் சமூக அரசியல், மதத் தத்துவம், பண்பாடு, கல்வி முதலிய துறைகளுடன் தொடர்புடையவை.
கிளீட்டஸ்........இலக்கியத் துறையில் புத்தாக்கம் முதல் தத்துவம் வரையான பிரிவுகளில் தாகூர் முக்கியமான கருத்துக்களை கொண்டிருந்தார். இவையும் அவரது கவிதைச் சிந்தனையை உருவாக்கியுள்ளன.
கலை...... ஆமாம். சீனாவில் ji xian lin, zeng qiong, liu lian ஆகியோர் மட்டுமல்ல மேலும் பல அறிஞர்கள் தாகூரின் கவிதைகளை ஆராய்ச்சி செய்கிறார்கள்.