கிளீட்டஸ்........மேலும் கூடுதலாக சொல்லுங்கள்.
கலை......மகிழ்ச்சி. சீன-இந்திய ஆய்வு மன்றத்தின் செயலாளரும், சிந்தோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான Hou chuan wen சீனாவில் தாகூரின் கவிதைகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தன் மூலம் 2004ம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார்.
கிளீட்டஸ்........தாகூரின் கவிதைகளை ஒப்பிட்டு ஆய்வு செய்வதை தெரிவு செய்ய காரணம் என்ன?
கலை......இது பற்றி அவர் கூறியதாவது.
கிளீட்டஸ்........ இலக்கியம், சமூக அரசியல், மதத் தத்துவம், பண்பாட்டுக் கல்வி ஆகியவற்றைத் தாகூர் தனது படைப்புகளுடன் இணைந்தார். வெளிநாடுகளில் தாகூரின் படைப்புகள் பற்றி அதிகமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவரது சிந்தனை குறிப்பாக இலக்கிய சிந்தனை அதாவது கவிதைச் சிந்தனை பற்றி ஆய்வுகள் குறிப்பிட்ட அளவில் பலவீனமானவை. ஆகவே நான் தாகூரின் கவிதையியலை ஆராயத் தீர்மானித்தேன் என்று அவர் கூறினார்.
கலை......சீனாவில் இவர்கள் உட்பட பல அறிஞர்கள் இப்போது தாகூரின் படைப்புகளை ஆராய்வதில் மேலும் உற்சாகம் காட்டியுள்ளனர்.
கிளீட்டஸ்........அவர்கள் ஆய்வில் பெற்றுள்ள பலன்கள் மற்றும் ஆக்கங்களை இலக்கிய தத்துவக் கண்ணோட்டத்தில் பார்த்தால், சீன வாசகர்களுக்கு தாகூர் பற்றிய புத்தம்புதிய தோற்றம் காணக்கிடைக்கும்.
கலை......ஆகவே மகத்தான கவிஞர் தாகூரை ஆராய்வதன் மூலம் இலக்கியத்துறையிலான சீன-இந்திய நட்பும் மேலும் அதிகரிக்கும். இரு நாட்டு மக்களுக்கிடையில் தத்துவ அடிப்படையிலான பரிமாற்றங்களும் மேலும் சுறுசுறுப்பாக இருக்கும்.
கிளீட்டஸ்........எதிர்காலத்தில் சீனாவில் தாகூர் அவர்களையும் அவரது படைப்புகளையும் ஆராயும் போக்கு மேலும் உயரும் என்பதில் ஐயமேயில்லை.
கலை......இத்துடன் இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.
கிளீட்டஸ்........அடுத்த வாரம் சனிக் கிழமையில் மீண்டும் சந்திப்போம். வணக்கம் நேயர்களே.