தமிழன்பன்----வணக்கம் கலைமகள். வணக்கம் நேயர்களே. கடந்த வாரத்தில்"கவர்ந்திழுக்கும் ஹெய்நான்"என்னும் பொது அறிவுப்போட்டி பற்றிய சிறப்பு நிகழ்ச்சியில் 4 கட்டுரைகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. சுவையான சிறப்பு நிகழ்ச்சி மூலம், பொது அறிவுப்போட்டியில் கலந்துகொள்ள ஆர்வம் அதிகரித்திருக்கும் என்று நம்புகின்றோம்.
கலைமகள்----கடந்த வாரத்தில், இந்தப் பொது அறிவுப்போட்டியின் 4 கட்டுரைகள் இணையதளத்திலும் வைக்கப்பட்டுள்ளன. கட்டுரைகளிலிருந்து சரியான விடைகளைக் கண்டறிந்து, நேயர்கள் மின்னஞ்சல் மூலம் நேரடியாக விடைத்தாட்களை அனுப்பலாம்.
தமிழன்பன்----கலைமகள், ஹெய்நான் பொது அறிவுப்போட்டி பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்ட பிறகு, பல நேயர்கள் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் இவ்வாண்டின் பொது அறிவுப்போட்டியின் விபரங்களைக் கேட்டனர்.
கலைமகள்----சரி, இன்றைய நிகழ்ச்சியில் கவர்ந்திழுக்கும் ஹெய்நான் என்னும் பொது அறிவுப்போட்டி பற்றிய விபரங்களை விளக்கிக்கூறுவோம்.
தமிழன்பன்----சொல்லுங்கள்.
கலைமகள்----வழக்கப்படி சீன வானொலி ஆண்டுதோறும் பொது அறிவுப்போட்டியை நடத்து வருகிறது. பொதுவாக அவ்வாண்டின் முக்கிய அம்சமும், சீனாவில் மிக புகழ்பெற்ற காட்சியிடமும் அவ்வாறான அறிவுப்போட்டியின் தலைப்பாக இருக்கின்றன. இவ்வாண்டு தமிழ்ப்பிரிவு மொத்தமாக இரண்டு பொது அறிவுப்போட்டிகளை நடத்த திட்டமிட்டிருந்தோம்.
தமிழன்பன்----முன்பு, கோடைக்காலத்தில் இணையதளம் மூலமான பொது அறிவுப்போட்டி தொடங்கியது அல்லவா? இவ்வாண்டு சற்று தாமாகவே நடைபெற்றது.
கலைமகள்----ஆமாம். இவ்வாண்டு சீன வானொலி நிலையத்தின் பணித்திட்டப்படி, தமிழ்ப்பிரிவு இணையதள அறிவுப்போட்டியை சிறப்பாக நடத்தியது. திபெத் மரபுவழி புத்தமத துறவியர் மடங்கள் பற்றிய பொது அறிவுப்போட்டி, ஆக்ஸ்ட் மற்றும் செப்டெம்பர் திங்களில் தமிழ் உள்பட சீன வானொலியைச் சேர்ந்த ஐந்து மொழி சேவைகள் இணையதளம் மூலம், இந்தப் போட்டியை நடத்தின. கடந்த இரண்டு திங்களில், 5000க்கு மேலான இணையப் பயன்பாட்டாளர்களும், த்துவோர்களும் நேயர்களும் இணையம் மூலம் இப்போட்டியில் கலந்துகொண்டனர். திபெத் மரபுவழி புத்தமத துறவியர் மடங்கள் பற்றிய பொது அறிவுப்போட்டியில் பரிசுப்பெறுவோரின் பெயர் பட்டியல் வெகுவிரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும். இணையதளத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வாருங்கள். தமிழன்பன், கடந்த வாரம் முதல் தமிழ்ப்பிரிவு ஒலிபரப்பு மூலமும் இணையதளம் மூலமும் ஒரே நேரத்தில் "கவர்ந்திழுக்கும் ஹெய்நான்"என்னும் பொது அறிவுப்போட்டியைத் தொடங்கியது. இப்போட்டியின் நிலைமையைப் பற்றி சொல்லுங்கள்.