தமிழன்பன்----சரி. பொது அறிவுப்போட்டியில் கலந்துகொள்வோருக்கு ஒரு சிறப்புப் பரிசு, 20 முதல் பரிசுகள், 60 இரண்டாம் பரிசுகள் மற்றும் 80 மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். சிறப்புப் பரிசு பெறுபவர், இவ்வாண்டின் இறுதிக்குள் சீனாவில் இலவசப் பயணம் மேற்கொள்ள அழைக்கப்படுவார். அன்புள்ள நேயர்களே, கவர்ந்திழுக்கும் ஹெய்நான் எனும் பொது அறிவுப் போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
கலைமகள்----இவ்வாண்டு, தமிழ்பிரிவு நடத்திய இரண்டு பொது அறிவுப்போட்டிகளிலும் கலந்துகொண்ட தமிழ் நேயர்களிலிருந்து மொத்தம் இரண்டு பேர் சீனாவில் இலவச பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பை பெறலாம். மேலும் கவிழ்ந்திருக்கும் ஹெய்நான் என்னும் பொது அறிவுப்போட்டியில் நேயர் நண்பர்கள் ஆக்கப்பூர்வமாக பங்கடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், மிக அதிகமான விடைத்தாட்களைத் திரட்டி அனுப்புகின்ற 3 முன்னணி நேயர் மன்றங்களுக்கு மன்றப் பரிசும் வழங்க திட்டமிட்டுள்ளோம். இந்தப் பரிசுப் பெறுகின்ற ஒவ்வொரு நேயர் மன்றமும் எழுதுகோல் வடிவிலான எண்ணியல் ஒலிப்பதிவுக் கருவி ஒன்றை பெறலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தனது மன்றத்திற்கு எண்ணியல் ஒலிபதிவு கருவியை வென்றெடுக்கும் அந்த மூன்று முன்னணி நேயர் மன்றங்களும் எவை என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழன்பன்----பரிசுகள் அட்டகாசம்.
கலைமகள்----நிச்சயமாக. தமிழ் இணையதளத்தில் பரிசுப்பொருட்களின் நிழற்படங்கள் வெகுவிரைவில் வைக்கப்படும்.
தமிழன்பன்----சரி நேயர்களே, இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடைகிறது. சீனா, சீன வானொலி, தமிழ்ப்பிரிவு முதலியவை பற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள விரும்பினால், மின்னஞ்சல், கடிதம், மற்றும் தொலைபேசி மூலம் எங்களுக்கு தெரிவியுங்கள். வணக்கம் நேயர்களே. கேட்கத் தவறாதீர்கள்.