தமிழன்பன்----சரி, கூறலாம். அக்டோபர் முதல் நாள் தொடக்கம் நவம்பர் 30ம் நாள் வரை கவர்ந்திழுக்கும் ஹெய்நான் எனும் பொது அறிவுப்போட்டி நடைபெறுகிறது. தமிழ் ஒலிபரப்பு மற்றும் இணையத்தளம் மூலம் மொத்தம் 4 கட்டுரைகளை நேயர்கள் கேட்கலாம். வாசிக்கலாம். ஒவ்வொரு கட்டுரையிலிருந்து பற்றிய இரண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. நேயர் நண்பர்கள் கட்டுரைகளிலிருந்து விடைகளைக் கண்டறிந்து, வான் அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலம் நவம்பர் 30ம் நாளுக்குள் தமிழ்ப்பிரிவுக்கு அனுப்பலாம்.
கலைமகள்----இந்தப் பொது அறிவுப்போட்டியின் நான்கு கட்டுரைகளில், ஹெய்நான் மாநிலத்தின் பசுமை சுற்றுலா வளர்ச்சி, பாரம்பரிய பண்பாடு, சிறுப்பான்மை தேசிய இன மக்களின் வாழ்க்கை ஆகியவற்றின் மூலம், ஹெய்நான் தீவை விபரமாக அறிமுகப்படுத்துகின்றோம்.
தமிழன்பன்----குறிப்பாக, ஆக்ஸ்ட் திங்கள் ஹெய்நான் பொது அறிவுப்போட்டிக்கான கட்டுரைகளை எழுதும் வகையில், கலைமகளும் மோகனும் ஹெய்நான் மாநிலத்தில் பணிப்பயணத்தை மேற்கொண்டு, பேட்டியளித்துள்ளனர்.
கலைமகள்----ஆமாம். நேயர் நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டிய அம்சங்களை, இந்தப் பொது அறிவுப் போட்டியின் கட்டுரைகளாக தொகுத்து வழங்கியுள்ளோம். மேலும், மோகன், நல்ல பல ஒளிப்படங்களை எடுத்துள்ளார். ஹெய்நான் மாநிலத்தின் லீ இன மக்களின் வாழ்க்கை, அழகான இயற்கைக்காட்சிகள் முதலியவை பற்றிய ஒளிப்பதிவுகளை தமிழ் இணையதளத்தில் பார்த்து மகிழலாம்.
தமிழன்பன்----இணையதளத்தில் கவர்ந்திருக்கும் ஹெய்நான் என்னும் பொது அறிவுப்போட்டியின் சிறப்புப் பக்கத்தைப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. கட்டுரைகள், ஒளிப்பதிவுகள், நிழற்படங்கள் பல வைக்கப்பட்டுள்ளன.
கலைமகள்----ஆமாம். தவிர, நேயர்களும் இணையப் பயன்பாட்டாளர்களும், பொது அறிவுப்போட்டியில் கலந்து கொள்வதற்கு வசதியை வழங்கும் வகையில், வினாத்தாளும் இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனால், நாங்கள் அனுப்புகின்ற வினாத்தாளை எதிர்ப்பார்த்திருக்க வேண்டிய நீங்கள், இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அச்செடுத்தும் அனுப்பலாம், மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம்.
தமிழன்பன்----இதுவரை, தமிழ்ப்பிரிவு மின்னஞ்சலுக்கு சுமார் ஆயிரம் விடைத்தாட்கள் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளதாக, தமிழ்ப்பிரிவின் தொடர்புக்குழுவின் பணியாளர்கள் தெரிவித்தனர். மேலும், வினாத்தாட்களை வெகுவிரைவில் நேயர்களுக்கும் நேயர் மன்றத் தலைவர்களுக்கும் அனுப்பத் தொடங்கியுள்ளோம். ஆனால் அதற்காக காத்திருக்காமல் நீங்களே அச்செடுத்தும் அனுப்பலாம். இப்போட்டியில் ஆக்கப்பூர்வமாக கலந்துகொண்டு அதிகம் பேரை பங்கெடுக்க தூண்ட வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம். சரி, நேயர்களே, மேலதிக விடைத்தாட்களைப் பெறுவதை எதிர்ப்பார்க்கின்றோம்.
கலைமகள்----ஆமாம். நேயர்களே உங்கள் மேலான ஆதரவை எதிர்பார்க்கின்றோம். வினாத்தாட்களை அனுப்புவதோடு, அக்டோபர் 22 முதல் 25ம் நாள் வரையும், நவம்பர் 12 முதல் 15ம் நாள் வரையும், கவர்ந்திழுக்கும் ஹெய்நான் எனும் பொது அறிவுப் போட்டி பற்றிய சிறப்பு நிகழ்ச்சியாக 4 கட்டுரைகளும் மறு ஒலிபரப்பு செய்யப்படும். சரி, தமிழன்பன், இனி இந்தப் பொது அறிவுப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் பரிசுகளை பற்றி நீங்கள் அறிமுகப்படுத்திக் கூறுங்கள்.