• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தமிழ் மொழி வளர்ச்சியில் சீனா
  2010-06-22 11:02:56  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வானொலி நிலையம்

வானொலி நிலையம் – அறிமுகம்

சீன வானொலி நிலையம் சீன அரசின் அனைத்துலக வானொலி நிலையமாகும். சிற்றலை மற்றும் பண்பலை வானொலிகள், இணையதள வானொலி, செல்லிடபேசி வானொலி மற்றும் தொலைக்காட்சி, செய்தி இதழ்கள், வெளியீட்டகம் ஆகிய தகவல் தொடர்பு வலைப்பின்னலாக சீன வானொலி நிலையம் திகழ்கிறது. 2000க்கும் அதிகமான பணியாளர்கள் இதில் பணிபுரிகின்றனர். உலகின் 60க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு 40 அந்நிய மொழிப் பிரிவுகள் மூலம் நாள்தோறும் 863 மணி நேரம் சிற்றலையிலும் 838.5 மணிநேரம் பண்பலையிலும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. உலகில் 12 வானொலி கன்ஃபியூசில்ஸ் வகுப்புகள் சீன வானொலி நிலையத்தின் கீழ் அதிகாரப்பூர்வமாக இயங்கி வருகின்றன. 36 அந்நிய மொழிப் பிரிவுகள் இணையதளம் மூலம் கன்ஃபியூசில்ஸ் வகுப்புகளை நடத்துகின்றன. சீன மொழிப் பாடப்புத்தகங்கள் 38 அந்நிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. பல்லூடக வசதிகளை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு செய்திச் சேவையை வளர்க்கும் இலக்கை மையமாகக் கொண்டு சீன வானொலி நிலையம் செயல்பட்டு வருகிறது.

வானொலி தொடக்கம்

1941ம் ஆண்டு டிசெம்பர் திங்கள் 3ம் நாள் சீன வானொலி நிலையம் தனது ஒலிபரப்பைத் தொடங்கியது. துவக்கத்தில் சீன மொழி தவிர, ஆங்கிலம் மற்றும் ஜப்பான் ஆகிய இரு வெளிநாட்டு மொழி ஒலிபரப்புகள் மட்டுமே இடம்பெற்றன. 60 ஆண்டுகளுக்குப் பின் 38 அந்நிய மொழிகள், சீன மொழி மற்றும் 4 உள்ளூர் மொழிகள் என நாளுக்கு 863 மணி நேரம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன. செய்திகள், செய்திவிளக்கம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு, அறிவியல் தொழில்நுட்பம் முதலியவற்றுடன் தொடர்புடைய சிறப்பு நிகழ்ச்சிகள் வானொலி நிலையத்தின் பல்வேறு மொழிப் பிரிவுகள் வழங்கும் பொதுவான நிகழ்ச்சிகளாகும். ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் ஒலிக்கின்ற சீன வானொலி, அளவிலும் செல்வாக்கிலும் வாய்ஸ் ஆப் அமெரிக்கா, பி.பி.சி ஆகியவற்றையடுத்து உலகில் மூன்றாவது இடத்தை வகிக்கும் உலகளாவிய வானொலி நிலையமாக வளர்ந்துள்ளது.

32 சீன வானொலி செய்தியாளர் நிலையங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் நிறுவப்பட்டுள்ளன. தவிர, சீனாவின் பல்வேறு மாநிலங்கள், மாநகரங்கள், தன்னாட்சிப் பிரதேசங்களிலும், ஹாங்காங் மற்றும் மகௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசங்களிலும் சீன வானொலி செய்தியாளர் நிலையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் மாபெரும் தகவல் தொடர்பு வலைப்பின்னலை சீன வானொலி நிலையம் உருவாக்கியுள்ளது. 1987ம் ஆண்டு முதல் பிரிட்டன், பிரான்ஸ், ஸவிட்சர்லாந்து, ரஷியா, ஸ்பெயின், கனடா, மாலி, பிரேசில், கியூபா, அமெரிக்கா முதலிய 10க்கும் அதிகமான நாடுகளின் உள்ளூர் வானொலி நிலையங்களுடன், நிகழ்ச்சிகளை உருவாக்குவதில் சீன வானொலி நிலையம், ஒத்துழைக்கத் துவங்கியது.

ஆண்டுதோறும் சுமார் 161 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வாழ்கின்ற நேயர்களிடமிருந்து இலட்சக்கணக்கில் கடிதங்கள் குவிந்தவாறே உள்ளன. வெளிநாட்டு நேயர்கள் விரைவாகவும் வசதியாகவும், பயன்தரும் முறையிலும் சீனாவை அறிந்து கொள்ளும் ஒரு திறந்த சாளரமாக சீன வானொலி நிலையம் மாறியுள்ளது. 2009ம் ஆண்டில் மட்டும் 29 இலட்சம் நேயர் கடிதங்கள் சீன வானொலிக்கு வந்தடைந்தன. 2004ம் ஆண்டு டிசம்பரில் சீனா வானொலி நிலையம் தனது இணையதளச் சேவையை துவக்கியது. 2008ம் ஆண்டு தொடக்கம், சீன வானொலி நிலையத்தின் இணையதளங்கள் சீன அரசின் முக்கிய செய்தி இணையதளமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதுமுதல், வெளிநாடுகளுக்கு ஒலிபரப்பாகும் வானொலி நிகழ்ச்சிகளும், அவற்றின் தரமும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன.

தமிழ் ஒலிபரப்பு - தொடக்கம்

சீன வானொலியில், தமிழ் ஒலிபரப்பு 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ஆரம்பமானது. அன்று முதல் இன்றுவரை ஒரு நாள் கூட, எக்காரணத்திற்காகவும் நிகழ்ச்சி தடைப்படாமல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது.

தமிழ்ப் பிரிவின் கட்டமைப்பு

மூத்த பணியாளர்கள்

தமிழ்ப்பிரிவு தொடங்கியபோது இருந்த பணியாளர்கள் அனைவரும், சீன வானொலிக் கல்லூரியில் வெளிநாட்டு மொழித் துறையில் தமிழ் மொழியைப் பயின்ற மாணவர்களாவர். பல்கலைக்கழகப் பட்டப்படிப்பின் 3வது கல்வியாண்டில் தமிழ் வானொலி ஒலிபரப்பை தொடங்குவது தொடர்பாக ஆயத்தப்பணிகளை மேற்கொண்டனர். அரையாண்டு ஆயத்தப் பணிகளுக்கு பின்னர், அவர்கள் தமிழ் ஒலிபரப்பை துவக்கினர். இவர்களே, சீன வானொலி தமிழ்ப் பிரிவின் மூத்த பணியாளர்களாவர். பேராசிரியர் எஸ் சுந்தரன், சிறந்த அறிவிப்பாளர்களான ஜெ.ஹாருமீனா, சி.தேவி, சிறந்த மொழிபெயர்ப்பாளர்களான zhang xiu lian, han bi mei அம்மையர், wang bao shi,zheng rui xiang,huang jing yao முதலியோர் மூத்தப் பணியாளர்களில் அடக்கம். அவர்களில் கல்லூரியில் பல தலைமுறை மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்த திருமதி பீ. லூசா சீனாவில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த பங்காற்றியுள்ளார்.

1 2 3
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040