• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மறுமலர்ச்சியடைந்துள்ள வென்ச்சுவான்— சிச்சுவான் சுற்றுலா துறையின் மீட்பு
  2011-04-15 16:44:33  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாநிலம் எழில் மிக்க சுற்றுலா மூலவளங்களால் புகழ்பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு மே 12ம் நாள் கடும் நிலகடுக்கத்தினால், சிச்சுவானின் சுற்றுலா துறை, பெருமளவில் குறைந்துள்ளது. சுமார் ஓராண்டு கால முயற்சி மூலம், இப்பொழுது, நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சுற்றுலாத் துறை மறுமலர்ச்சியடைய துவங்கியுள்ளது.

ஜப்பானிய பயணி யொஷி ஒத்தானி, சீனாவில் பல முறை சுற்றுலா பயணம் மேற்கொண்டவர். சிச்சுவான் நிலநடுக்கத்தில் கடுமையாக சீர்குலைக்கப்பட்ட தூசியாங்யன் காட்சி தலத்துக்கு அவர் மீண்டும் சென்றார். அங்கு பாதுகாப்பான சுற்றுலா சூழ்நிலையைப் பார்த்தால் அவர் மகிழ்ச்சியடைந்தார். அவர் கூறியதாவது:

எனக்கு சீன வரலாறு மிகவும் பிடிக்கும். குழுந்தை பருவலத்திலேயே, சீன வரலாறு பற்றிய நூல்களைப் படித்தேன். இது, என்னுடைய 6வது முறை சீனப்பயணமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

துசியாங்யன் நகரத்தின் சுற்றுலா பணியகத்தின் சந்தைப்பிரிவு பொறுப்பாளர் சாங் சூங் செங் அறிமுகப்படுத்துகையில், இப்பொழுது, நாள்தோறும் துசியாங்யன் காட்சி தலத்துக்கு வந்து பார்வையிடும் பயணிகளின் எண்ணிக்கை 6000ஐ எட்டியது என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

இவ்வாண்டின் முதல் காலாண்டில், பயணிகளின் எண்ணிக்கையும் சுற்றுலா வருமானமும் 2008ம் ஆண்டின் அதே காலத்தின் நிலையை எட்டின. இவ்வாண்டுக்குள் சுற்றுலாத் துறை, 2007ம் ஆண்டின் நிலைக்கு மீட்பதில் நம்பிக்கைக் கொள்கின்றோம் என்று அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் சுற்றுலாத் துறையை வெகுவிரைவில் மீட்கும் வகையில், நிலநடுக்கத்துக்குப் பின், சிச்சுவான் மாநிலம், பாதிக்கப்பட்ட காட்சித் தலங்களின் வசதிகளையும், அவற்றுக்கு செல்லும் பாதைகளையும் செப்பனிட்டு வருகின்றது. உள்ளூர் சுற்றுலா காட்சித் தலங்கள், போக்குவரத்து முதலிய தகவல்கள் அடங்கிய கையேட்டை, சுற்றுலா வாரியங்கள் தயாரித்து, தங்கு விடுதி, தொடர்வண்டி நிலையம் முதலிய இடங்களி்ல வைத்துள்ளன. ஜெர்மன் பயணி மத்தியாஸ் யாஹ்லிங் எமது செய்தியாளரிடம் பேசுகையில், சில காட்சித் தலங்களில் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு எதையும் பார்க்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

1 2 3
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040