துசியாங்யனைத் தவிர, ஆபா திபெத் மற்றும் சியாங் இன தன்னாட்சி வட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இயற்கைக் காட்சி மண்டலமான சியுசேகோவின் சுற்றுலாச் சந்தை சீராக மீட்கப்பட்டது. இத்தன்னாட்சி வட்டத்தின் துணைத் தலைவர் சியேள யூ சே அறிமுகப்படுத்துகையில், சியுசேகோ இயற்கை காட்சி மண்டலத்தின் அடிப்படை சுற்றுலா வசதிகள் கடுமையாக பாதிக்கப்படவில்லை. ஆனால், இக்காட்சி மண்டலத்துக்குச் செல்லும் நெடுஞ்சாலை சீர்குலைக்கப்பட்டதால், அதன் சுற்றுலாத் துறை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
ஒரு புறம், வடமேற்கு பகுதியை இணைக்கும் சுற்றுலா வழியை வெகுவிரைவில் உருவாக்க வேண்டும். மறு புறம், பெய்ஜிங், ஷாங்காய், சென்சான், குவாங்சோ ஆகிய பெரிய நகரங்களிலிருந்து சியுசேகோவுக்கு வரும் நேரடி விமான பறத்தல்களைத் திறக்க வேண்டும். அதற்குப் பின், பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது, நாள்தோறும், சியுசேகோ இயற்கை காட்சி மண்டலத்துக்கு சுற்றுலாவாக வரும் பயணிகளின் எண்ணிக்கை 3800ஐ எட்டியது என்று தெரிகிறது.
நிலநடுக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்படாத சில அடிப்படை வசதிகளைச் செப்பனிடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இப்போது, பயணிகள் இங்கு சுற்றுலா மேற்கொள்வது பாதுகாப்பானது என்று சியேள யூ சே தெரிவித்தார்.