• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மறுமலர்ச்சியடைந்துள்ள வென்ச்சுவான்— சிச்சுவான் சுற்றுலா துறையின் மீட்பு
  2011-04-15 16:44:33  cri எழுத்தின் அளவு:  A A A   

முழு சமூகம் மற்றும் பல்வேறு துறையினரின் உதவி மற்றும் கவனத்துக்கு நன்றி தெரிவித்து, சுற்றுலா துறை மறுமலச்ச்சியடைவதை விரைவுபடுத்த, மாநிலம் முழுவதும் பல்வேறு காட்சி தலங்கள் கூட்டாக முன்னுரிமை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, சிச்சுவான் மாநிலத்தின் சுற்றுலாப் பணியகம் முன்னொழிந்தது. மே திங்கள் 12ம் நாள் அதாவது நிலநடுக்கம் நிகழ்ந்த ஓராண்டு நினைவு நாளில், மாநிலத்தின் அனைத்து காட்சித் தலங்களும் பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்க சுற்றுலா பணியகம் வேண்டுகோள் விடுத்தது.

தவிர, மேலும் அதிகமான பயணிகளை ஈர்க்க, பல்வேறு சுற்றுலா நிறுவனங்கள் புதிய சுற்றுலா வழிகளை வடிவமைத்துள்ளன.

ஓராண்டு கால மறுசீரமைப்பின் மூலம், தற்போது சிச்சுவான் மாநிலத்தின் சுற்றுலாத் துறை சீராக மீட்கப்பட்டது. சிச்சுவான் மாநிலத்தின் சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் சாங் கூ கூறியதாவது:

இவ்வாண்டின் முதல் காலாண்டில் சுற்றுலா துறையின் வருமானம், கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 12.1 விழுக்காடு அதிகமாகும். கடந்த ஆண்டின் முதல் காலாண்டின் போது, நிலநடுக்கம் நிகழவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது, படிப்படியாக மீட்கப்பட்ட சிச்சுவான் மாநிலத்தின் சுற்றுலாத் துறை ஒழுங்காகவும் விரைவாகவும் வளர்ச்சியடைந்து வருகிறது. இது குறித்து, அவர் நிரைவான நம்பிக்கை கொள்கின்றார்.

2009ம் ஆண்டில், மொத்த சுற்றுலா வருமானம், 2007ம் ஆண்டின் நிலையை, அதாவது 12170 கோடி யுவானைத் தாண்ட வேண்டும். இத்தொகையைத் தாண்டுவதில், நம்பிக்கை கொள்கின்றோம் என்று அவர் தெரிவித்தார்.

அன்புள்ள நேயர்களே, சிச்சுவானின் அழகான காட்சிகள், இயற்கையாக உருவானவை. கடுமையான தீமைக்குப் பின், சிச்சுவான் மேலும் அழகான மேலும் தன் நம்பிக்கையுடைய புன்னகையுடன், விருந்தினர்களை வரவேற்கின்றது.


1 2 3
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040