பெய்சுவான் நடுநிலை பள்ளியின் 16 வயதான மாணவி Tanyan இவ்வாறு செய்தியாளரிடம் கூறினார்.
2008ம் ஆண்டு மே 12ம் நாள் நிகழந்த வென்சுவான் நிலநடுக்கத்தில் அவரது அக்கா உயிரிழந்தார். அவரது வீடு இடிந்தது. அதன் பிறகு, அந்நிலநடுக்கத்தின் நிழல் போன்ற கொடியை நினைவுகள் Tanyanஇன் மனத்தைப் பாதித்து வருகிறது.
கனவில் சில சமயம் வீடுகள் இடிவது போல காண்கிறேன். அப்போது மிகவும் பயப்படுகிறேன் என்று அவர் கூறினார்.
நிலநடுக்கத்திற்கு பின் தனது பள்ளிக்கூடத்திற்கு வந்து மாணவர்களுடன் அளவளாவி செல்வது, அவரது மனத்திற்கு அமைதியை கொண்டு வந்த அரு மருந்தாகியது.
மாணவர்களுடன் பழகும் போது துயரமான விடயங்களை மறக்க முடிகிறது. அவர்களுடன் பேசி சிரித்து படிப்படியாக கவலைகளை மறந்து விடுகிறேன் என்று அவர் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, புதிதாக கட்டியமைக்கப்பட்ட பெய்சுவான் பள்ளிகூடத்தில் தொடர்ந்து கல்வி கற்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. Tanyan மேலும் கூறியதாவது
புதிய பள்ளி மிக நன்றாக உள்ளது. கட்டிடங்கள், பிற வசதிகள், அனைத்தும் எங்களுக்கு உகந்தவை. முந்தைய வகுப்பறையில் ஒரு கரும் பலகை மட்டுமே இருந்தது என்று அவர் கூறினார்.