• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வென்சுவான் நிலநடுக்கத்திற்கு பிந்தைய உளநல குணப்படுத்தல்
  2011-04-15 16:36:25  cri எழுத்தின் அளவு:  A A A   

2 ஆண்டு காலத்தில், tanyan தனது மனத்தில் நிலநடுக்கம் ஏற்படுத்தியிருந்த நிழல் போன்ற கொடிய நினைவுகளை படிப்படியாக மறந்துள்ளார். ஆனால், மேலதிகமானோர் இன்னும் பாதிப்பிலிருந்து விடுபடவில்லை.

வென்சுவான் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், பெய்சுவான் இடைநிலை பள்ளிக்கூடம், பல்வேறு துறைகள் கவனம் செலுத்துகின்ற இடமாக மாறியது. ஏனெனில், இங்குள்ள 2 பள்ளிக்கூடக் கட்டிடங்கள் நிலநடுக்கத்தில் இடிந்தன. 1000க்கு மேலான மாணவர்களும் ஆசிரியர்களும் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தால் உயிர் தப்பித்தவர்களின் மனம் ஆழமாக புண்பட்டது.

சீன அறிவியல் கழகத்தின் உளவியல் ஆய்வகத்தின் முனைவர் லுங் தி, பெய்சுவான் பள்ளியின் உளநல குணப்படுத்தல் நிலையத்தின் தலைவராவார். 2008ம் ஆண்டின் ஜுன் திஙகள் முதல் இதுவரையான 2 ஆண்டு காலத்தில், அவர் தலைமையிலான உளநல ஆற்றுப்படுத்துதல் குழு, பெய்சுவான் பள்ளியில் உளநல உதவி செய்து வருகிறது. வெளிப்புறத்திலிருந்து காட்டப்படும் அதிக கவனம், பெய்சுவான் பள்ளியின் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதிக நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது என்று அவர் தெரிவித்தார். இது பற்றி, qiujin என்ற சீன மொழி ஆசிரியர் அதிக உணர்வுகளை கொள்கிறார். அவர் கூறியதாவது

ஆசிரியர்களைப் பொறுத்தவரை நிர்ப்பந்தம் மிக பெரியது. கொஞ்சம் சீராக செயல்படாமல் இருந்தால், வெளி உலகம் அந்த குறைப்பாட்டில் கவனம் செலுத்தி அதனை பெரிதாக்கக் கூடும் என அஞ்சிகிறோம் என்று அவர் கவலை தெரிவித்தார்.

1 2 3 4
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040