• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வென்சுவான் நிலநடுக்கத்திற்கு பிந்தைய உளநல குணப்படுத்தல்
  2011-04-15 16:36:25  cri எழுத்தின் அளவு:  A A A   

சமூகத்தின் பல்வேறு துறைகளின் அன்பையும், எதிர்பார்ப்பையும் நிராசைப்படுத்தாமல் இருக்க, பெய்ச்சுவான் பள்ளிக்கூடம் கல்வியில் அதிக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்நிலை ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உளநல குணப்படுத்தலுக்கு பாதகமானது என்று முனைவர் லுங் தி கருதுகிறார்.   

மக்களின் மனது புண்பட்டிருக்கும் போது, அவர்களுக்கு ஒரு சுதந்திரமான சூழ்நிலையை வழங்க வேண்டும். அவர்கள் தங்கள் உணர்வுகளை உணர்ந்து, அறிந்து ஒழங்குப்படுத்த வேண்டியது. மிக முக்கியமானது. அவர்கள் பேசி அளவளாவும் வாய்ப்புகளைப் பெற வேண்டும். இந்த வழிமுறை தான் மனகாயத்தை போக்கி சீராக்கும் வாய்ப்பாகும் என்று அவர் கூறினார்.

வென்சுவான் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், உளநல குணப்படுத்தல் பலவகைகளில் நடைபெற்று வருகிறது வென்சுவான் மாவட்டத்தின் shuimo என்ற இடத்தில் 2008ம் ஆண்டில் தொண்டு நிலையம் நிறுவப்பட்டது. அது நிறுவப்பட்ட துவக்க கட்டத்தில், உள்ளூர் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு உள நல சேவை புரிந்தது. அங்கு வெளிப்புறத்தின் பாதிப்பு ஒப்பீடளவில் குறைவு. பள்ளியின் சூழ்நிலை மகிழ்ச்சியானது. எனவே, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உளநல குணப்படுத்தலுக்கு நல்ல சூழ்நிலையை இது உருவாக்கியது. தற்போது, பொது மக்கள் தான் இந்நிலையத்தின் முக்கிய இலக்கும க்களாகும் என்று இந்நிலையத்தின் பொறுப்பாளர் yangling கூறினார்.

மக்கள், தாங்கள் அனுபவித்த துயரத்தை எங்களிடம் பேசி பகிர விரும்புகின்றனர் என்று அவர் கூறினார்.

உள்ளூர் மக்கள் கூடியவிரைவில் நிலநடுக்கத்தின் கொடிய நினைவுகளை மறக்க, இந்த நிலையத்தின் உதவியுடன் ஒரு நடன அணி நிறுவப்பட்டது. முதியோர் கூடி தேனீர் அருந்தி அளவளாவி செய்து சமூக பரிமாற்ற நடவடிக்கைகளை அதிகரித்து வருகின்றனர்.

துவக்க கட்டத்தில் நானும் தொண்டர்களும் குடியிருப்பு பிரதேசங்களுக்கு சென்று நடவடிக்கைகளை நடத்தினோம். தற்போது, அவர்கள் தாங்களாகவே மகிழ்ச்சியாக இந்நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இது ஒரு பெரிய முன்னேற்றமாகும் என்றுyangling கூறினார்.

1 2 3 4
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040