• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ராட்சத பாண்டாவின் புதிய வீடு
  2011-04-15 16:45:19  cri எழுத்தின் அளவு:  A A A   

ராட்சத பாண்டாவின் குட்டிகள் நலமா? அவற்றுக்கான மூங்கில் உணவு போதியளவில் கிடைக்கிறாதா? அவற்றின் வாழ்க்கை எப்படியுள்ளது என்று அறிய விரும்புகின்றேன்.
நீங்கள் கேட்டது, பெய்ஜிங்கிலுள்ள ச்சியாங் லோ சி எனும் சிறுவன் தெரிவித்த விருப்பமாகும். அண்மையில் பெய்ஜிங் விலங்கியல் பூங்காவில் 9 திங்களாக வைக்கப்பட்டிருந்த 8 ராட்சத பாண்டா குட்டிகளை அவர் சில நாட்களுக்கு முன் வழியனுப்பினார். கடந்த ஆண்டு மே 12 சி ச்சுவான் வென் சுவான் கடும் நிலநடுக்கத்துக்குப் பின், Wolongஇலிருந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்ட 63 பாண்டா குட்டிகளில் இந்த 8 குட்டிகளும் அடங்குகின்றன. ஓராண்டுக்குப் பின், அவற்றில் பெரும்பாலானவை படிப்படியாக சி ச்சுவானிலுள்ள அவற்றின் வசிப்பிடத்துக்குத் திரும்பி அனுப்பப்பட்டன. இன்றைய நகிழ்ச்சியில் ராட்சத பாண்டா பாதுகாப்பு பிரதேசத்தின் மறுசீரமைப்பு பற்றி கூறுகின்றோம்.
நிலநடுக்கம் நிகழ்ந்த போது, அந்த ராட்சத பாண்டாக்கள் துணிவாக இருக்கவில்லை. மிகவும் பயந்து, மந்தையாக ஒன்று கூடின. இந்த நிலநடுக்கம் அவற்றின் உளத்தைக் கடுமையாக பாதித்தது என்று பாண்டாவின் தந்தையாக அழைக்கப்படும் சி ச்சுவான் Wolong சீன ராட்சத பாண்டா பாதுகாப்பு ஆய்வு மையத்தின் தலைவர் zhang he min கூறினார்.
1 2 3 4 5
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040