• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ராட்சத பாண்டாவின் புதிய வீடு
  2011-04-15 16:45:19  cri எழுத்தின் அளவு:  A A A   


Wolong பாண்டா வளர்ப்பு தளமும், பாண்டாவின் இயற்கை வளர்ப்பு பிரதேசமும் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாண்டாக்களுக்கு ஏற்ற 70 விழுக்காட்டு  இயற்கை வளர்ப்பு பிரதேசத்திலுள்ள மூங்கில்கள் நாசப்பட்டன. ராட்சத பாண்டாக்கள் பட்டிணியில் சிக்கியிருந்தன. சென் து ராட்சத பாண்டா வளர்ப்பு ஆய்வு தளம் உடனடியாக உதவி அளித்தது. தலைவர் zhang zhi he கூறியதாவது
எமது தளத்தில் சுமார் 1000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் மூங்கில்கள் வளர்க்கப்படுகின்றன. இயற்கை சீற்றம் நிகழ்ந்த போது, இந்த மூங்கில்களை மூலம் பாண்டாக்களின் உணவு பிரச்சினையைத் தீர்க்க தயாராக இருக்கின்றோம் என்று அவர் கூறினார்.
தற்போது, wolong பாண்டாக்கள் அனைத்தும் உரிய முறையில் இடமாற்றம் செய்யப்பட்டன. ஆனால், wolong இயற்கை பாதுகாப்பு பிரதேசத்தை மறுசீரமைத்து, பாண்டாக்களை முன்பு இருந்த வளர்ப்பு இடத்துக்குத் திரும்பி அனுப்புவது என்பது wolong சீன ராட்சத பாண்டா ஆய்வு மையத்தின் தலைவர் zhang he minஇன் மிகப் பெரிய விருப்பமாகும்.
நிலவியல் பாதுகாப்பு, பாண்டாவின் வாழ்க்கை வழக்கம் முதலியவற்றைக் கருத்தில் கொண்டு, புதிய மையத்தின் இடம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள சூழல், வானிலை, நீர் வளம் முதலியவை wolong பிரதேசத்திலேயே இருந்ததை விட மிக சிறந்தவை. மறுசீரமைப்புத் திட்டப்பணி ஜுலை திங்களில் பன்முகங்களிலும் துவங்கும். ஒதுக்கீட்டுத் தொகை 140 கோடி யுவானைத் தாண்டும் என்று தெரிய வருகின்றது.

1 2 3 4 5
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040