• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ராட்சத பாண்டாவின் புதிய வீடு
  2011-04-15 16:45:19  cri எழுத்தின் அளவு:  A A A   


அண்மையில் எமது செய்தியாளர்கள் Wolongகிற்கு 100 கிலோமீட்டர் அப்பாலுள்ள சென் து ராட்சத பாண்டா வளர்ப்பு ஆய்வு தளத்துக்குச் சென்று பேட்டி கண்டனர். இந்தத் தளத்தில் எங்கெங்கும் பசுமையான மூங்கில் காணப்படுகின்றது. பாண்டாக்கள் மர மேடையில் மகிழ்ச்சியுடன் விளையாடுவதை அவர்கள் கண்டனர். அமெரிக்காவி்ன் சியாட்டிலிருந்து வந்த வாஷிங்டன் என்பவர் ஆர்வத்துடன் பாண்டாக்கள் மூங்கில் தின்னுவதை கண்டு சரித்தார். அவர் கூறியதாவது
பாண்டாவைப் பார்ப்பது மிகவும் சுவையான அனுபவமாகும். ராட்சத பாண்டாவை நான் கண்டு ரசிப்பது இதுவே முதல் முறையாகும். பாண்டா குட்டிகள் மிகவும் அழகானவை. இந்தத் தளம் சிறப்பானது. முன்பு அவ்வளவு அதிகமான மூங்கில்களைப் பார்த்ததில்லை என்று அவர் கூறினார்.
பாண்டா வளர்ப்பாளர் lao tanஉம், ஜப்பானிய தன்னார்வ தொண்டரான மாணவர் ஒருவரும் சேர்ந்து பாண்டாவின் உணவுகளை தயாரித்தனர். நிலநடுக்கத்துக்குப் பின், 4 ராட்சத பாண்டாக்கள் wolongகிலிருந்து இங்கே அனுப்பப்பட்டன என்று lao tan கூறினார். தனது குழந்தையைப் போன்ற பாண்டா பற்றி அவர் கூறியதாவது
பாண்டாவுக்கு அன்பு காட்டினால், அவை உங்கள் கோரிக்கைக்கேற்ப செயல்படும். அவை நோய்வாய்பட்டால், சிறப்பு மருத்துவ நிபுணர்களை அழைத்து கவனிக்கின்றோம். இருந்த போதிலும், அப்போது அவற்றின் உடல் நிலை பற்றி நான் மிகவும் கவலைப்பட்டேன் என்று lao tan கூறினார்.

1 2 3 4 5
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040