சீன வானொலி மூலம், ஆங்கிலம், பிரெஞ்சு மொழி, ஸ்பானிய மொழி் முதலிய உலகளவில் பெருமளவில் பயன்படுத்தப்பட்ட மொழிகளையும், வங்காள மொழி, தமிழ் மொழி, கிஸ்வாகிலி உள்ளிட்ட தனியொரு நாடுகளும் தேசிய இனங்களும் பயன்படுத்தும் மொழிகளையும் கேட்கலாம். இப்பொழுது சீன வானொலி 61 மொழிகளில் ஒலிபரப்புகிறது.
சீன வானொலி நிலையத்தில், ஒருவகை வெளிநாட்டு மொழியை சொந்த இலட்சியமாக கொண்டவர்கள் மிக அதிகம். அவர்களின் மனதில் வெளிநாட்டு மொழி மூலம் நேயர்களுடன் தொடர்பு கொண்டு கருத்துக்களைப் பரிமாறுவது ஒருவகை பெருமையாக உள்ளது.
சீன வானொலியின் வங்காள மொழிப் பிரிவு, 40 ஆண்டுக்கு மேலாக ஒலிபரப்பி வருகிறது. வங்காள தேச நேயர்கள் பலர் குழந்தைப்பருவத்திலிருந்து சீன வானொலியின் வங்காள மொழி ஒலிபரப்பைக் கேட்டு, சீனாவின் அறிவிப்பாளர்களுடன் ஆழ்ந்த நட்புறவை நிறுவினர். உள்ளூர் மக்களின் கருத்தில், சீன வானொலி வங்காள தேசத்தின் மொழி மூலம் ஒலிபரப்புவது வங்காள பண்பாட்டுக்கான பேரார்வ மதிப்பு ஆகும் என்று வங்காள மொழிப்பிரிவில் பணியாற்றும் சீ சிங்வூ கூறினார்.