• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலியின் 70வது ஆண்டு நிறைவுக்கான பொது அறிவு போட்டியின் 3வது கட்டுரை
  2011-08-23 17:56:34  cri எழுத்தின் அளவு:  A A A   

புதிய செய்தி ஊடக மேடை மேலதிக இளைஞர்களை ஈர்த்து வருகிறது. அவர்களில் புஷ்டு மொழி பிரிவின் தலைவர் சீ மாங் குறிப்பிடத்தக்கவர்.

புஷ்டு மொழி ஆப்கானிஸ்தானில் பரந்தளவில் பயன்படுத்தப்பட்ட மொழிகளில் ஒன்றாகும். 3000 ஆண்டுகளுக்கு மேலான வரலாறுடையது. சீன வானொலி 1973ம் ஆண்டில் புஷ்டு ஒலிபரப்பைத் தொடங்கியது. 2010ம் ஆண்டில் சீன வானொலியின் புஷ்டு மொழி பண்பலை நிகழ்ச்சி காப்புலிலும், காந்தஹாரிலும் ஒரே நேரத்தில் ஒலிபரப்பப்படத் தொடங்கியது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் மக்கள் சீனாவைப் புரிந்துகொள்வதற்கு புதிய வழிமுறை வழங்கப்பட்டது. BBC,VOA முதலிய மேலை நாடுகளின் வானொலிகளிலிருந்து சீன வானொலி வேறுபட்டது. வெளிநாட்டவர்கள் புஷ்டு மொழி மூலம் நேரடியாக நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்பும் ஒரேயோரு வானொலி சீன வானொலியாகும். ஆப்கானிஸ்தான் நேயர்களைப் பொறுத்தவரை, இந்த நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழ்ச்சியடைகின்றனர் என்று சீ மாங் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:

சீனாவில் சிலர் புஷ்டு மொழியைப் பேசி, வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிப்பரப்புவதைக் கேட்டு, ஆப்கானிஸ்தான் நேயர்கள் வியப்படைகின்றனர். அதிகார செய்தி ஊடகம், அரசின் உயர்நிலை அலுவலர், பொது மக்கள் முதலியோரின் கவனத்தை இது ஈர்த்துள்ளது. முன்பு கடினமான நிலைமையில் அவர்கள் சீன வானொலியின் சிற்றலை ஒலிபரப்பைக் கேட்க முயற்சி செய்தனர். இப்போது பண்பலை ஒலிபரப்பு தொடங்கிய பின் அவர்கள் மேலும் மகிழ்ச்சியடைந்தனர் என்று சீ மாங் கூறினார்.

சீன வானொலி நிலையத்தில் பணியாளர்கள், தமது முயற்சிகளின் மூலம், பல்வகை பண்பாடுகளுக்கு மதிப்பளித்து, வேறுபட்ட பண்பாடுகளிடை சமத்துவத்தை தேடி, உலகளவிலான நேயர்களுடன் தொடர்புகொண்டு வருகின்றனர்.


1 2 3 4
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040