வங்காள தேசம் மக்கள் தொகை அதிகமாக இருந்த போதிலும் நிலப்பரப்பு குறைவாக கொண்ட நாடாகும். அவர்களின் பார்வையில், சீனா ஒரு பெரிய நாடாகவுள்ளது. வங்காள மொழி வங்காள தேசத்தின் நாட்டு மொழியாகவும் இந்தியாவில் பெருமளவில் பயன்படுத்தப்பட்ட மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது. வங்காள மொழியை தாய்மொழியாக கொண்டு பேசியவர்களின் எண்ணிக்கை, 20 கோடியைத் தாண்டியது. வங்காள மொழி பேசியவர்களில் புகழ்பெற்ற கவிஞர் இரபீந்திரநாத் தாகூர் முக்கியமானவர். திரு சீ சிங்வூ, கடந்த நூற்றாண்டின் 90வது ஆண்டுகள் முதல், கடைசிக் கவிதை, மலர் தோட்டம் உள்ளிட்ட தாகூரின் படைப்புகளை மொழி பெயர்த்தி, சீனாவில் வெளியிட்டார். இவ்வாண்டு தாகூர் பிறந்த 150வது நிறைவு ஆண்டாகும். இதைக் கொண்டாடும் வகையில் வங்காள மொழிப்பிரிவு சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்பியது. இது பற்றி சீ சிங்வூ கூறியதாவது:
தாகூர் பிறந்த நாளின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாங்கள் தொடர்புடைய நிபுணர்களையும் பல்வேறு துறையினர்களையும் பேட்டி கண்டு, சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்பினோம். நேயர்கள் பலர் மின்னஞ்சல் மூலம் உடனடியாக இத்தகைய சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு வரவேற்ப்பைத் தெரிவித்தனர். கவிஞர் தாகூர் அவர்களுக்கு சீன வானொலி செலுத்தும் கவனத்தில் நேயர்கள் பெருமையடைந்துள்ளதாக திரு சீ குறிப்பிட்டார்.
காலத்தின் கோரிக்கை மற்றும் சர்வதேச நிலைமையின் மாற்றத்துடன், சீன வானொலி நிலையத்தின் வெளிநாட்டு ஒலிபரப்பு இலட்சியம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. தொலைத்தொடர்பு தொழில் நுட்பத்தின் வளர்ச்சியில், சீன வானொலி இணையதளத்தைப் பெரிதும் வளர்க்கிறது. 1998ம் ஆண்டில், CRI ONLINE என்னும் பன்மொழி இணையதளத்தை சீன வானொலி நிறுவியது. இதில், நேயர்கள் தமது சொந்த மொழியில் நிகழ்ச்சிகளைக் கேட்கலாம். செய்திகளைப் பார்க்கலாம். இதுவரை, CRI ONLINE என்னும் இணையதளம், 61 மொழிகளைக் கொண்ட இணைய மேடையாக வளர்ந்துள்ளது. இதனால், சீன வானொலி நிலையம், உலகில் மிக அதிகமான மொழிகளைக் கொண்ட சர்வதேச ஒலிபரப்பு நிறுவனமாக மாறியுள்ளது.