• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சா மா குதாவ் என்ற வர்த்தகப் பாதை
  2012-02-23 16:43:59  cri எழுத்தின் அளவு:  A A A   

1978ம் ஆண்டு நான் யுன்னான் மாநிலத்தின் தி சிங் வட்டத்தில் பிரதேச மொழியை ஆராய்ச்சி செய்த போது அப்பிரதேசத்தை கவனிக்கத் துவங்கினேன். அங்குள்ள பாதை ஒன்றில் பயணம் செய்தால் இந்தியாவுக்குச் செல்லலாம் என்று கூறப்பட்டது. பழங்காலத்தில் தேயிலை இப்பாதை மூலம் இந்தியாவில் விற்கப்பட்டது என்று அவர் கூறினார்.

தேயிலை, உலகிற்கு சீனா வழங்கிய முக்கிய பங்களிப்பு. குதிரை சவாரி, சீனாவின் தென்மேற்கு பகுதியின் இன்றியமையாத போக்குவரத்து வசதியாகும். எனவே, அந்த பழைய பாதை முழுவதும், cha ma gudao அதாவது, குதிரையால் தேயிலையை விற்கின்ற பழங்கால பாதையென அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில், நேபாளம் இந்தியா முதலிய தெற்காசிய நாடுகளுக்கும் சீனாவுக்குமிடை வர்த்தக பாதை அதுவாகும். அது, சீனாவின் வெளிநாட்டு பரிமாற்ற வரலாற்றில் முக்கிய பங்காற்றியுள்ளது. அது பற்றி பேராசிரியர் மு ச்சி ஹுங் கூறியதாவது

இந்த பாதை, பல்வேறு தேசிய இனங்களிடை இணக்கத்திற்கு ஒரு வழியை வழங்கியது. அது, பல்வகை பண்பாட்டுப் பரிமாற்றத்திற்கான ஒரு வழியாகும். பண்பாட்டை வெளிக்கொணர்கின்ற வழியாகவும் இருந்தது. ஒரு வர்த்தக பாதையிலிருந்து படிப்படியாக தேசிய இனங்களிடை இணக்க வழிப் பாதையாக அது மாறியுள்ளது. புகழ் பெற்ற இத்தாலி சுற்றுலா அறிஞர் மார்கோ போலோ உள்பட பலர், இந்த பாதையில் பண்பாட்டு பரிமாற்றம் மேற்கொண்டனர் என்று அவர் கூறினார்.

யுன்னான் மாநிலத்தின்wen sheng jie என்ற கிராமம், cha ma gudao பாதையின் வழியில் அமைந்திருக்கும் முக்கிய கிராமமாகும். தற்போது, அங்கு, பழங்கால வர்த்தகத்தின் சிதிலங்களை காணலாம்.

wen sheng jie கிராமத்தின் நுழைவாயிலில், வர மாற்று கல் சாலை ஒன்று உள்ளது. 800 மீட்டர் நீளமான அந்த சாலை, குதிரையை வரவேற்கின்ற கல்பாதையாக அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில், cha ma gudao பாதையில் அமைந்துள்ள இக்கிராமம் வழியாக பழங்காலத்தில், சீன வணிகர்கள் துணி, தாள், பட்டு முதலியவற்றை சீன-மியன்மார் எல்லைக்கு கொண்டு சென்று விற்றனர். பண்டமாற்று முறையில் தேயிலை, கறுப்பு சர்க்கரை முதலியவற்ரை வாங்கிக் கொண்டு வந்தனர். இது பற்றி 69 வயதான அக்கிராமவாசி shi xingcai கூறியதாவது

1 2 3 4
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040