• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அழகான பண்பாட்டு நகரம்---தா லீ
  2012-02-23 16:43:48  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்த 3 கோபுரங்கள், தா லீ நகரின் சின்னமாகும். அவை, இந்நகரத்தின் மிக பழைய முக்கோண வடிவக் கட்டிட தொகுதியாகும். அவை, தென்மேற்கு சீன பிரதேசத்தின் மிகவும் புகழ்பெற்ற கோபுரங்களும் ஆகும். பெய் இனப் பிரதேசத்தில், இனத் தனிச்சிறப்பு வாய்ந்த வீடுகளும் காட்சிகளும் மிக புகழ் பெற்றவை. பல நிபுணர்கள் இங்கு வந்து வீடுகளை ஆராய்ச்சி செய்கின்றனர் என்று அவர் கூறினார்.

தாலீ நகரின் இயற்கை காட்சி அதிக பயணிகளை ஈர்க்கிறது. பெய்ஜிங்கிலிருந்து அங்கு சுற்றுலா மேற்கொண்ட திரு zhou அங்குள்ள சுற்றுலா பாதுகாப்பைப் பாராட்டினார்.

இங்கு அழகாக இருக்கிறது. பெய் இனத் தனிச் சிறப்பு வாய்ந்த நடையுடை பாவனை கவர்ச்சி மிக்கது. பெய் இன மக்களின் ஊர் இது தான். இங்குள்ள மலை, ஆறு முதலிய இயற்கை காட்சி, சீனாவில் அரியது. இங்குள்ள மக்கள் பயணிகளை நட்போடு வரவேற்கின்றனர். தவிரவும் இங்குள்ள வீடுகள் சிறப்பானவை. உள்ளூர் மக்களின் வசிப்பிட நிலை சிறந்தது என்று அவர் கூறினார்.

தாலீ நகரில் இயற்கை காட்சி இடங்களில் மிகவும் புகழ் பெற்றவை, cangshan மலையும் erhai ஏரியுமாகும். தாலீ நகரத்தின் மேற்கு பகுதி, 19 மலை முகடுகளை உடைய cangshan மலை. கோடைகாலத்தில் பனி, அழகான மேகம், ஊற்று நீர் ஆகியவை, இங்குள்ள சிறப்புகளாகும்.

தாலீ நகரத்தின் கிழக்கில், erhai ஏரி அமைகிறது. அதன் தெற்கிலிருந்து வடக்கு வரையான தூரம், 40 கிலோமீட்டராகும். 240 சதுர கிலோமீ்ட்டர் நிலப்பரப்புடைய இந்த ஏரி, சீனாவில் புகழ் பெற்ற பீடபூமியிலுள்ள ஏரியாகும். இங்குள்ள தூய்மையான நீர், வெள்ளை மணிக் கல் கண்ணாடி போல உள்ளது. படகுகள் நீரில் ஓடும் காட்சி, ஒரு ஓவியம் போல உள்ளது. இங்குள்ள நீர் பாதுகாப்பை பயணியர் திரு zhou வெகுவாக பாராட்டினார்.

1 2 3 4
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040