2009ஆம் ஆண்டு முதல் இன்று வரை, பெய்ஜிங் பன்னாட்டு நீண்டகால ஓட்டப் போட்டி நான்கு முறை நடைபெற்றுள்ளது. 100, 50 மற்றும் 10 கிலோமீட்டர் தூரமான மூன்று பாரம்பரிய போட்டிகளை விட, இவ்வாண்டு, 50 கிலோமீட்டர் தொலை இரட்டையர் ஹைகிங்க் எனப்படும் மலை நடைப்போட்டி குழந்தைகளுக்கான ஓட்டப் போட்டி ஆகியவை சிறப்பாக நடத்தப்பட்டன. 8000க்கும் அதிகமானோர் இவ்வாண்டு இப்போட்டியில் கலந்து கொண்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இப்போட்டியில் பெரும் ஆர்வத்துடன் கூட்டாகக் கலந்து கொள்வது கடந்த ஆண்டிலிருந்து வேறுபட்டதாக அமைந்து குறிப்பிடத்தக்கது.
100 கிலோமீட்டர் நீண்டகால ஓட்டப் போட்டியில், ஓடும் பாதையில் மலை மற்றும் மண் பாதைகள், 50 விழுக்காட்டுக்கு மேலாக இருக்கும். ஓடுவதற்கு மிக உயரமாக அமைந்த பாதை, கடல் மட்டத்திலிருந்து 1060 மீட்டரை எட்டியது. விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, மொத்தம் சுமார் 100 மருத்துவ மீட்புதவிப் பணியாளர்களும், 500க்கு அதிகமான தன்னார்வத் தொண்டர்களும் முழு போட்டியிலும் மருத்துவச் சேவையை வழங்கினர்.
ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் நடத்தப்படுகின்ற மிகக் கடினமான அதிக தொலைவு நீடிக்கும் ஆற்றலோடு ஓட வேண்டிய ஓட்டப்போட்டியாக, இந்தப் போட்டி இருக்கிறது. பெய்ஜிங்கில் நடைபெற்ற மிக உயர் நிலையான பன்னாட்டு நீண்டகால ஓட்டப்போட்டியாகவும் இது திகழ்கிறது.