ச்சுபு துறவியர்மடம், லாசா நகரத்தின் மேற்கே 60 கிலோமீட்டர் தூரத்தில் துய்லுங் தெச்சிங் மாவட்டத்தின் கு ரொங்கில் அமைந்துள்ளது. 1189ம் ஆண்டு திபெத் மரபுவழிப் புத்த மதத்தின் கெக்யு பிரிவை ஆரம்பித்தவரின் முன்மொழிவால் அது ஆக்கப்பட்டது. அது, வாழும் புத்தர்கள் இறந்த பிறகு புதிய உயிரைப் பெறும் முறைமை தோன்றிய இடமாகும். அங்குள்ள 2வது தலைமுறையான ர்கா மா பா வாழும் புத்தர், திபெத் மரபுவழிப் புத்த மதத்தின் முதலாவது புத்துயிர் பெற்ற புத்தர் ஆவார்.
1 2 3 4