லாப்ராங் துறவியர் மடம், வட மேற்குச் சீனாவின் கான் சு மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள வடிநிலத்தில் இருக்கிறது. சீனாவின் திபெத் மரபுவழி புத்த மதத்தின் கேலுக் பிரிவின் முக்கிய துறவியர் மடம் இதுவாகும். இத்துறவியர் மடத்தில் 6 புத்த மதக் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் முழுமையான திபெத் மரபுவழி புத்த மதக் கற்பித்தல் முறைமை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆகையால், இத்துறவியர் மடம், கேலுக் பிரிவின் உச்சக் கல்வி நிலையங்களில் ஒன்று என போற்றப்படுகிறது. இதனிடையே, இம்மடத்தில் உருவாகியுள்ள கட்டிடக் கலை, இறைவேண்டல் கூட்டம், புத்த மதக் கலை, திபெத் மொழி திருமறைகள் ஆகியவற்றின் காரணமாக, இத்துறவியர் மடம் உள்ளூர் திபெத் இனப் பண்பாடு மற்றும் கலை மையமாக இருக்கிறது.
1 2 3 4