18வது நூற்றாண்டின் துவக்கத்தில், அதாவது சீனாவின் இறுதி வம்சமான சிங் வம்சத்தின் மிக வளமான காலத்தில், இம்மடம் கட்டியமைக்கப்பட்டது. தற்போது, சுமார் 8 லட்சம் சதுர மீட்டர் நிலப்பரப்புடைய லாப்ராங் துறவியர் மடம், பிரமாண்டமான கட்டிட அமைப்பாக உள்ளது. இதில் 90க்கு மேலான முக்கிய மண்டபங்களும், 10 ஆயிரத்துக்கு அதிகமான துறவியர் இல்லங்களும் இருக்கின்றன. தவிர, பல்வகை புத்த மண்டபங்கள், வாழ் புத்தர் மாளிகைகள், திருமறை ஓதுதல் அரங்குகள், இறைவேண்டல் கூட்ட இடங்கள், திருமறை அச்சகங்கள், புத்தக் கோபுரங்கள் ஆகியவை இருக்கின்றன.