இது மட்டுமல்ல, இத்துறவியர் மடத்தில், பல பத்து ஆயிரம் தொல் பொருட்களும், 80 லட்சம் திருமறைகளும் நூல்களும் சேமிக்கப்பட்டுள்ளன. இந்த நூல்கள், தத்துவம், மறைவான புத்த மதம், மருத்துவம் மற்றும் மருந்து இயல், வரலாறு, வாழ்க்கை வரலாற்றிலக்கியம், வானியல், சொல்லாட்சி உள்ளிட்ட 10க்கு அதிகமான துறைகளுடன் தொடர்புடையவை. அவற்றில் திபெத் மொழி உருவாகிய துவக்கத்திலும், திபெத் மரபு வழி புத்த மதம் உருவாகிய துவக்கத்திலும் பரவி வரும் அரிய நூல்கள் அதிகம். இவற்றில் கேலுக் பிரிவைத் தோற்றுவித்தவரின் மூலப் படைப்புகள், தலாய் லாமா, பாஞ்சென் மற்றும் பல வாழ் புத்தர்களின் படைப்புகள், இந்திய சமஸ்கிருத மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு, தொகுக்கப்பட்ட புத்த மத திருமறைகள் ஆகியவை இடம்பெறுகின்றன. இவற்றில் மிக அரிதானது, தங்க நீரால் எழுதப்பட்ட பத்திர ஓலை திருமறை ஆகும். இந்த நூல்கள், சீனாவின் செல்வமாகும். இது மட்டுமல்ல, இவை, உலகில் பல்வேறு நாடுகளின் புத்த மத நம்பிக்கையாளரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.