தாஷில்ஹன்போ துறவியர் மடம், ஷிகாட்சே நகரின் மேற்குப் பகுதியில் உள்ள நிசேர் மலையின் தென் பக்கத்தில் அமைந்துள்ளது. 1447ஆம் ஆண்டு, குருமார் சோங்கப்பாவின் மாணவர் கெண்டுன் ஸுபா அதாவது முதலாவது தலாய்லாமா பிறப்பித்த கட்டளையின்படி, இத்துறவியர் மடம் கட்டியமைக்கத் துவங்கியது. திபெத் மரபுவழி புத்த மதத்தின் பிரிவான கேலுக் பிரிவின் புகழ் பெற்ற துறவியர் மடம் இதுவாகும். நான்காவது பாஞ்செனும், அவருக்குப் பிந்தைய தலைமுறை பாஞ்சென்களும் இத்துறவியர் மடத்தில் வாழ்ந்து வந்தனர்.