பழமை வாய்ந்த அதிக திபெத் மொழி திருமறைகள் இத்துறவியர் மடத்தில் இருக்கின்றன. இவற்றில் 30க்கு மேலான தொகுதிகள் இடம்பெறும் சோங்கபா வாழ்க்கை வரலாற்றிலக்கியம் மிகவும் பிரபலமாகி, பரந்தளவில் பரவி விட்டது. ஹான் புத்தர் மண்டபம், 7வது பாஞ்செனின் காலத்தில் கட்டியமைக்கப்பட்டது. சிங் வம்சத்தின் சில பேரரசர்கள், பாஞ்சென்களுக்கு வழங்கிய அன்பளிப்புப் பொருட்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.