தாஷில்ஹன்போ துறவியர் மடத்தில், பெரிய மைத்ரேய மண்டபமும் பல்வேறு தலைமுறை பாஞ்சென்களின் பூதவுடல்கள் இருக்கும் கோபுரங்கள் இடம்பெறும் மண்டபமும் மிக பிரமாண்டமான மண்டபங்களாகும். பெரிய மைத்ரேய மண்டபம், இத்துறவியர் மடத்தின் மேற்குப் பக்கத்தில் இருக்கிறது. இம்மண்டபத்தின் உயரம் 30 மீட்டர் ஆகும். இம்மண்டபத்தில், 9வது பாஞ்செனின் தலைமையில் கட்டியமைக்கப்பட்ட மைத்நேய சிலை இருக்கிறது. 26.2 மீட்டர் உயரம் உள்ள இச்சிலை, சுமார் ஒரு லட்சம் கிலோகிராம் வெண்கலம் மற்றும் 335 கிலோகிராம் தங்கத்தால் தயாரிக்கப்பட்டது. உலகில் மிகப் பெரிய வெண்கல புத்தர் சிலை இதுவாகும்.