வூதாதாவ் காட்சிப் பிரதேசம், தியென் ச்சின் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. ச்சங்து, ச்சுங்ச்சிங், ச்சாங்தெ, தாலி, முனான், மாச்சாங் ஆகிய 5 வீதிகள் இப்பிரதேசத்தை உருவாக்கியுள்ளன. எனவே, அது, வூதாதாவ் என அழைக்கப்பட்டது. வூ தாதாவ் என்பதற்கு, சீன மொழியில் ஐந்து பெரிய வீதிகள் என்று பொருள்.
புகழ் பெற்ற பிரமுகர்கள் இங்கு கூடி வாழ்ந்துள்ளனர். லி ஷுஃபூ, யுங் ச்சியன்ச்சியு முதலிய பிரமுகர்களின் வீடுகள் இதுவரையும் சீராகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஹெப்பிங் உணவகம், முக்கிய விருந்தினர்களுக்கு விருந்தளிக்கின்ற இடமாக இருந்தது. இங்கு பல்வேறு நாடுகளின் தனிச்சிறப்பு பாணியுடைய கட்டிடங்களைக் காணலாம். அவற்றின் மொத்த கட்டிட நிலப்பரப்பு சுமார் 10 இலட்சம் சதுர மீட்டரை எட்டியுள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி முதலிய நாடுகளின் கட்டிடப் பாணியிலான 230 கட்டிடங்கள் இங்கு அமைந்துள்ளன. அவையெல்லாம் இதுவரை மிக சீராகவும் முழுமையாகவும் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இப்பிரதேசத்தில் சுற்றுலா செய்வதற்கு நுழைவுச்சீ்ட்டு தேவையில்லை. குதிரை வண்டியில் வூதாதாவ்வை சுற்றி பார்ப்பது, பல பயணிகளின் தெரிவாகும். மிதிவண்டியை வாடகைக்கு எடுத்தும் சுற்றி பார்க்கலாம்.