இந்தக் கட்டுரை பற்றிய இரண்டு வினாக்கள்.
ஒன்று, 《If You Are the One 2》என்ற திரைப்படம், ஹெய்நானின் எந்தக் காட்சித்தளத்தில் தயாரிக்கப்பட்டது? இரண்டு, யாலொங் குடா வெட்ப மண்டல வானகக் காட்டுப் பூங்காவை வடிவமைத்தபோது, பின்பற்றிய அடிப்படைக் கொள்கை என்ன?
சீனாவின் தென்பகுதியிலுள்ள ஹெய்நான் மாநிலம், சீனாவின் ஒரே ஒரு வெட்ப மண்டல தீவு ஆகும். இத்தீவில், செழுமையான அதிகமான வெட்ப மண்டல சுற்றுலா மூலவளங்களும் இயற்கைச் சூழல் மூலவளங்களும் உள்ளன. 1999ம் ஆண்டு, சீனாவின் முதல் இயற்கைச் சுற்றுச்சூழல் மாநிலமாக ஹெய்நான் மாநிலம், உருவாக துவங்கியது.
யாலொங் குடா வெட்ப மண்டல வானகக் காட்டுப் பூங்கா, ஹெய்நான் மாநிலத்தின் சான்யா நகரில் அமைந்துள்ளது. அதன் மொத்த நிலப்பரப்பு 1506 ஹெக்டராகும். இப்பூங்கா, சான்யா நகரில் முதலாவது காட்டுப் பூங்காவாகவும் ஹெய்நான் மாநிலத்தின் முதலாவது கடற்கரை மலை இயற்கைச் சுற்றுச்சூழல் பூங்காவாகவும் உள்ளது.
கடலுக்கும் வானுக்குமிடையில் கட்டியமைக்கப்பட்ட தோட்டத்தைத் தரும் பறவை கூடு என்ற உல்லாச ஓய்வகம், அழகான வெட்ப மண்டல வனக் காட்சி ஆகியவற்றை கொண்டுள்ள யாலொங் குடா வெட்ப மண்டல வானகக் காட்டுப் பூங்கா, சீனாவின் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் ஃபாங் சியாவ் காங்கின் கவனத்தை ஈர்த்தது. 《If You Are the One 2》என்ற திரைப்படத்தின் சில பகுதிகள், அங்கே காட்சிப்படுத்தப்பட்டன. தற்போது இந்த திரைப்படத்தில் காட்டப்படும் இப்பூங்கா சுற்றுலாப் பயணியர் பார்வையிடும் முதல் தேர்வாக மாறியுள்ளது.