இப்பூங்காவை வடிவமைத்தபோது, உயிரினச் சுற்றுச்சூழலைச் சீர்குலைக்காது இருத்தல் என்ற கொள்கையில் ஊன்றி நின்றதாக சன்யா யாலொங் குடா வெட்ப மண்டல வானகக் காட்டுப் பூங்காவின் தலைவர் நியே சன் லேய் எமது செய்தியாளருக்கு பேட்டியளித்தபோது தெரிவித்தார். அவர் கூறியதாவது
அப்போது ஹெய்நான் தீவின் வளர்ச்சியில், பெரும்பாலானோர், கடற்கரையின் அருகில் திட்டப்பணிகளை மேற்கொள்ள விரும்புகின்றனர். ஆனால், நாங்கள், மலைப் பகுதியில் இப்பூங்காவைக் கட்டியமைத்தோம். இந்த மலை நல்ல மூலவளமாக அமைந்தது. அது ஹெய்நான் சுற்றுலாத் துறையில் நட்சத்திர புகழ் பெறுவதாக மாற வேண்டும் என்று நினைத்தேன் என்று அவர் கூறினார்.
வனச்சுற்றுலா மட்டுமே, ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியாது. பல்வகை சுற்றுலா வழிமுறைகள் மூலம், இப்பூங்காவின் உண்மையான அழகையையும் மதிப்பையும் அனைவரும் அறிய செய்ய முடியும். தவிரவும், மேலதிகமான சுற்றுலாப் பயணிகளின் தேவைகளையும் நிறைவு செய்யலாம்.
இங்கே வரும் சுற்றுலா பயணிகள், சுற்றி பார்ப்பது மட்டுமல்ல, களைப்பு ஏற்பட்டால், விடுதியில் சாப்பிடலாம். தேவையென்றால், தாங்கி ஓய்வெடுக்கலாம். தவிர, இப்பூங்காவில், நடைப்பாதையும் வாகனப் பாதையும் அமைந்துள்ளன. மேலதிக சுற்றுலாப் பயணிகளின் தேவை முழுவதும் நிறைவு செய்யப்படும். முதியோரும் குழந்தைகளும் கம்பி வண்டி ஊர்தி மூலம், மலையில் ஏறலாம். அழகான இயற்கைக் காட்சியிடங்களை அடைந்த பிறகு, அவ்விடத்தை நடந்து, சுற்றிப் பார்க்கலாம்.