பாதுகாப்புடன் இணைந்த வளர்ச்சி கோட்பாட்டில், யாலொங் குடா வெட்ப மண்டல வானகக் காட்டுப் பூங்கா கட்டியமைக்கப்பட்டது. இப்பூங்காவில் அனைத்து காட்சியிடங்களும் இயற்கைச் சூழலில் தோன்றுகின்றன. செய்தியாளரிடம் நியே சன் லேய் கூறியதாவது
மலையில் இப்பூங்காவைக் கட்டியமைக்கும் முன், சான்யா நகரின் வனத்தொழில் பணியகம் எங்களுடன் கலந்துரையாடியது. வளர்ச்சியின் போது, இம்மலையின் இயற்கைச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று அந்த பணியகம் வேண்டுகோள் விடுத்தது. இதனால், நாங்கள் மலை நிர்வாகக் குழுவை உருவாக்கி, காடு பாதுகாப்பணியை செயல்படுத்தி, மரம் வெட்டுதல் வேட்டையாடுதல், பாறைகளை வெடிவைத்து தகர்ப்பது போன்றவற்றை சுரங்கவெடிப்பதையும் தடை செய்கிறோம் என்றார் அவர்.
யாலொங் குடா வெட்ப மண்டல வானகக் காட்டுப் பூங்காவில் ஏராளமான 2 மாடி உல்லாச ஓய்வகங்கள் கட்டியமைக்கப்பட்டன. இயற்கைச் சுற்றுச்சூழலை பாதுகாப்பதை முக்கியமாக கருத்தில் கொண்டதால், கல், மரப்பட்டை, மேய்ச்சல் பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தி, லீ இன தனிச்சிறப்பு படி, இந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. தவிரவும், இப்பூங்காவில், எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் ஏராளமான வசதிகள் அமைந்துள்ளன. இப்பூங்காவின் நிர்வாகத்தில் இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. நியே சன் லேய் கூறியதாவது
சூரிய ஆற்றலால் நீர் சூடாக்கி, எரியாற்றலைச் சிக்கனப்படுத்தலாம். சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இருந்தால், குப்பைகளும் கண்டிப்பாக அதிகரிக்கும். நாள்தோறும் வாகனங்களின் மூலம் இந்த குப்பைகளை சேர்த்து, ஏற்றிச்செல்கிறோம். மலையில் குப்பைகள் தாங்க கூடாது. தவிரவும், நாள்தோறும் கழிவு நீரை மறு சுழற்சி செய்த பிறகு, செடிகளின் நீர் பாசனத்திற்கு பயன்படுத்துகின்றோம் என்றார் அவர்.