• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தேய் இன விவசாயிகளின் வணிகச் சின்னப் பாதை
  2013-02-22 16:17:36  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் தென்மேற்கு எல்லை புறத்தில் அமைந்த யுன்னான் மாநிலத்தின் சிஷூவாங்பான்னாவின் மெண் ஹே மாவட்டம், சீனாவின் வணிக தானிய விற்பனைத் தளமாகும். மெண் ஷே வட்டம் அதன் வணிகச் சின்னமான mangendaigong அரிசியால் மிகவும் புகழ் பெற்றது. அதன் தானிய விளைச்சல் உள்ளூர் மொத்த தானிய விளைச்சலின் நான்கில் ஒரு பகுதிக்கு மேற்பட்டது. Maigen கிராமத்தின் விவசாயிகள் மற்றும் அதன் தரமிக்க அரிசி கூட்டுறவு சங்கமும் இணைந்து தான் இச்சின்னத்தை உருவாக்கினர்.

சிஷூவாங்பான்னாவில், உணவகத்திலும் குடும்பஙகளிலும் மக்கள் 502 என்னும் அரிசியைச் சாப்பிடலாம். 502 என்பது dian tun 502 அரிசியின் சுருக்கமான பெயராகும். உகந்த நீர் வளம் மண் வளம் மற்றும் காலநிலை கட்டுப்பாடுகளின் காரணமாக, இவ்வரிசியை யுன்னான் மாநிலத்தின் 3 இடங்களில் கிடைத்த பெறப்படலாம். சிஷூவாங்பான்னாவின் மெண் ஹே வட்டத்தின் man gen கிராமம் இந்த மூன்று இடங்களில் ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளில், உள்ளூர் விவசாயிகள் இந்தத் தரமிக்க நெலைப் பயிரிட்ட போதிலும், உயர்வான விலையில் விற்கப்பட முடியாத நிலை இருந்தது. இது உள்ளூர் விவசாயிகளின் உழைப்பு உற்சாகத்தை பாதித்துள்ளது.

அனைவரும் ஒன்றுபட்டு அரிசியை நல்ல விலையில் விற்பது கனவாகிவிட்டது. Man gen கிராமத்தின் சிறப்புக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் yan wen lai நினைவுக் கூர்ந்தார். அவர் கூறியதாவது:  

2005ஆம் ஆண்டில், உள்ளூர் விவசாயிகள் உயர் தரமான நெல்லை பயிரிட்டு வந்தனர். ஆனால், ஒரு கிலோகிராம் அரிசியை 1.5 யுவானுக்கு தான் விற்க இருந்தது. நாம் இப்பிரச்சினையைக் கண்டறிந்த பின், 31 விவசாய குடும்பங்களுடன் இக்கூட்டுறவுச் சங்கத்தை உருவாக்கினோம்.

Yan wen he மற்றொரு பொறுப்பாளருடன் 200 யுவானை வழங்கினர், மற்ற குடும்பங்கள் பல இச்சங்கத்தில் சேர விரும்புகின்றன. ஒவ்வொரு குடும்பத்திற்கு 100 யுவான் அளித்தது. முன்பு திரட்டப்பட்ட 3000க்கு மேலான யுவானை கொண்டு, அவர்கள் man gen கிராமச் சிறப்புச் சங்கத்தை உருவாக்கினர். தொடக்கத்தில், இச்சங்கம் விவசாயிகள் விளைவித்த அரிசியை நிறுவனங்களுக்கு விற்று, மேலும் உயரவான விலையைப் பெற்றது. அதன் வளர்ச்சியுடன், உற்பத்தியிலிருந்து விற்பனை வரையான உற்பத்திச் சங்கிலித் தொடர் வளர்ச்சி வழிமுறையை அவர்கள் மேற்கொள்ளத் தொடங்கினர். கடந்த சில ஆண்டுகளில், பிற தொழில்நிறுவனங்களுடன் ஒத்துழைத்து பதனீடு செய்வதும் விற்பனை செய்வதும் மூலம், அவர்கள் சுதந்திரமாக பயிரிடுதல் மற்றும் பதனீட்டுக் கட்டத்தில் நுழைந்துள்ளனர். 2011ஆம் ஆண்டில், diantun 502 அரிசி பிரதிநிதித்துவப்படுத்திய mangendaigong பசுமை உணவு சான்றிதழைப் பெற்றுள்ளது. சிஷூவாங்பான்னாவில் அரிசிச் சின்னம் பச்சை உணவு சான்றிதழைப் பெறுவது இதுவே முதன்முறை.

1 2 3
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040