நாம் ஆண்டுதோறும் இளைஞர் கூடைப்பந்து விளையாட்டு, முதியோர் விளையாட்டச் சங்கம் ஆகியவை போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகின்றோம். கடந்த சில ஆண்டுகளில், பண்பாடு, விளையாட்டு முதலிய அடிப்படை வசதி கட்டுமானங்களில் மொத்தம் 4 லட்சத்து ஆயிரம் யுவான் செல்விடப்பட்டது. கூட்டுறவுச் சங்கம் மேலும் வளர வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் yanwen கூறினார்.
இந்த அரிசி பசுமை உணவு சான்றிதழை மட்டுமே பெற்றிருக்கிறது. ஆனால், ஜியான் சூ மாநிலம் கரிம உணவுச் சான்றிதழை உடையது. விவசாய மற்றும் தானிய துறையில் ஆழமான செல்வாக்குடன் விளங்கும் ஜியான் சூ மாநிலம் அரிசி மாவு, பல்வேறு சுகாதார பொருட்கள் ஆகியவற்றை உருவாக்குவது, பெரும் படைப்பாற்றல் உடையது.
சங்கத்தின் உறுப்பினர்களில் பெரும்பானோர் உள்ளூர் வாசிகளாக இருப்பதால், சங்கம் மேலும் வளர்வதற்காக, நெல்வகை வளர்ப்பு ஆராய்வதை தவிர, திறமை சாலிகளை அறிமுகப்படுத்தி வளர்க்க வேண்டும் என்று சங்கப் பொருளர் yuyan அண்மையார் கூறினார்.
கடந்த ஆண்டில், நம் சங்கம் 2 பல்கலைக்கழக பட்டதாரிகளைச் சேர்த்துக்கொண்டது. அவர்களில் ஒருவர் கணக்கர், மற்றவர் எழுத்தர் அவர்கள் இருவரும் பல்கலைக்கழக பட்டதாரிகள். ஒவ்வொருவரும் தஙிகளின் இறுதியில் பிரச்சினைகளைத் தொகுத்துக் கூறி, மேலும் செவ்வனே பணிகளை மேம்படுத்த கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
2012ஆம் ஆண்டு, mangen கிராமத்தின் உயர் தர நெல் மற்றும் அரிசி பதனீட்டுத் துறையின் சிறப்புக் கூட்டுறவுச் சங்கம் சீன வேளாண்மை அமைச்சகம் வழங்கிய தலைசிறந்த விவசாயிகள் சிறப்புக்கூட்டுறவு சங்கம் என்னும் பெருமையை பெற்றது. தற்போது, mangen கிராமத்தின் விவசாயிகள் தங்கள் புதிய இலக்கை முன்வைத்து, உள்ளூர் விவசாய துறையில் புகழ் பெற்ற சின்னமாக மாற விரும்பி செயல்பட்டு வருகின்றனர்.