நவ சீனா நிறுவப்பட்ட பிறகு, வா இனம் ஆதிகால சமூகத்திலிருந்து சோஷலிச சமூகத்தில் நேரடியாக நுழைந்தது. 3 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட வா இனம் மலைப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றது. அவர்கள் நவீனமயமாக்க நகர வாழ்க்கையை தொட்டு உணர விரும்பாது, ஆதிகால பழங்குடி இன வாழ்க்கை பரம்பரை பரம்பரையாக நடத்திவருகின்றனர். 75 வயதான உள்ளூர் முதியவர் தனது வாழ்க்கையை இவ்வாறு விவரித்தார்.
ஒரு அரிவாள், ஒரு தீ, ஒரு மண்வாரி ஆகியவற்றைக் கொண்டு சாகுபடி மேற்கொண்டோம் என்று அவர் கூறினார்.
இன்றைய வா இன கிராமங்கள் மனித குலத்தின் குழந்தை பருவ வாழ்க்கையை இன்னுமும் வெளிப்படுத்துகின்றன. ஆனால், வா இன மக்கள் மலைப் பிரதேசத்திலிருந்து வெளியேறி, அழகான புதிய ச்சிமாங் மாவட்டத்து வந்து, நவீனமயமாக்கத் தாயகத்தை உருவாக்குவதற்குக் காரணம் என்ன?
பழைய ச்சிமாங் மாவட்டம் குன்றின் சரிவுகளில் அமைந்துள்ளது. மழைகாலத்தில், பெரிவாரியான மழை பெய்வதால், மண் அரிப்பு முதலிய இயற்கை சீற்றங்களும் ஏற்பட்டன என்று ச்சிமாங் மாவட்ட பிரச்சார அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்ற ச்செய் ஹெய் ச்சு கூறினார்.