பழைய மாவட்டத்தின் பாதுகாப்பு பிரச்சினையை தீர்க்கும் வகையில், 2000ம் ஆண்டு முதல், மீட்புதவி திட்டத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக் கமிட்டி மற்றும் சீன அரசு அவசரமாக இயற்றி, அழகான ஆதிகால இயற்கைச் சூழலைப் பெற்றிருக்கின்ற மோ ஷோ லாங் தென் ஏரி பிரதேசத்தை தேர்ந்தெடுத்து, நவீனமயமான புதிய ச்சிமாங் மாவட்டத்தை உருவாக்கின. ச்சிமாங் வா இன தன்னாட்சி மாவட்டம் மலை பிரதேசத்திலிருந்து மலை அடிவாரத்துக்கு குடிபெயர்ந்து, ஆதிகால சிதிலத்திலிருந்து நவீனமயமாக்கச் சமூகத்தில் நுழைந்துள்ளது.
இந்தப் புதிய மாவட்டத்தில் இருக்கின்ற சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமான முக்கிய சாலை மோ ஷோ லாங் தென் ஏரிக்கரைக்கு செல்கின்றது. கடை, வங்கி, பேரங்காடி, திரையரங்கு, சதுக்கம், உணவகம் முதலிய 21வது நூற்றாண்டின் நவீனமயமான பொருளாதாய வசதிகள் இங்கே உள்ளன.
நவீனமயமான புதிய ச்சிமாங் மாவட்டம் வா இன பாரம்பரிய பண்பாட்டை இழக்கவில்லை. வா இன பாரம்பரிய பண்பாட்டை பாதுகாக்கும் வகையில், 2006ம் ஆண்டு ச்சிமாங் மாவட்டம் வா இன பண்பாட்டு வெளிகொணர்வோர் குழுவை உருவாக்கியது. முழு மாவட்டத்தில் திறமையைக் கொண்ட குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வா இன ஆடல் பாடல் மற்றும் நாட்டுப்புற பண்பாட்டைக் கற்றுக் கொண்டனர்.
வா இன மொழி உச்சரிப்பை கொண்ட ஹங் மொழி மூலம், குழந்தைகளுக்கு வா இன பண்பாட்டை நான் பதிவு செய்தேன். ஆனால், அரசு சாரா கலைஞர்கள் பேச்சு மூலம் பரப்புவது போதுமானது என்றார்கள். குழங்தைகளை தனது குடும்பங்களின் வம்சாவழி குறிப்பைப் பதிசு செய்ய நாங்கள் ஊக்குவித்தோம் என்று வா இன பண்பாட்டு வெளிகொணர்வோர் குழுவின் ஆசிரியர் சாங் ச்சௌ லின் கூறினார்.
சுமார் 8 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட புதிய ச்சிமாங் மாவட்டத்தில் 47 ஹெக்டர் வெப்பமண்டல மழைக்காடுகள் மோ ஷோ லாங் தென் ஏரி மற்றும் கன்னி காடுகள் லாங் மோ யெய் மலை ஆகியவை உள்ளன. வா இன மொழி உச்சரிப்பான லாங் மோ யெய் வா இன மக்களின் புனித இடமாகும். காளை தலைகள் தொங்கப்பட்ட காடு புனித இடமாக வெளிப்படுத்தியது. முக்கிய நடவடிக்கைகளை நடத்தி, சர்ச்சைகளைத் தீர்த்த போது, காளை தலைகளை கடவுளுக்கு வா இன பழங்குடி வழங்க வேண்டும். எனவே, செங்குதான பள்ளத்தாக்கு, உயரமுள்ள செங்குத்தான பாறை, மரம் முதலியவற்றில், காளை தலை எலும்புகளை காணலாம்.