அழகான புனித இடத்தைப் பாதுகாக்கும் வகையில், உள்ளூர் அரசு முக்கிய முயற்சி மேற்கொண்டுள்ளது. ச்சிமாங் மாவட்டத்தின் சுற்றுசூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் துயன் இவ்வாறு தெரிவித்தார்.
இயற்கைச் சூழல் புஅழ், அழகான வா மலை என்ற நோக்கத்தை ச்சிமாங் மாவட்ட அரசு முன்வைத்த படி, மாவட்டத்தின் சுற்றுசூழல் பாதுகாப்பு ஆணையம் பல பணிகளை மேற்கொண்டுள்ளது. நச்சு வாயுக்களை வெளிவிடும் தொழில் நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தக் கட்டுப்பாடு மேற்கொண்டு, மோ ஷோ லாங் தென் ஏரிக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது. இப்பிரதேசத்தில் கட்டிடங்களையும் தொழில் நிறுவனங்களையும் கட்டியமைப்பதைத் தடைசெய்ததோடு, கழிவு நீர் மோ ஷோ லாங் தென் ஏரியில் வெளியேறுவதை தடைசெய்துள்ளது. வாழ்க்கை கழிவுப் பொருட்களுக்கு ஒருங்கிணைப்பாக மேலாண்மை மேற்கொண்டதோடு, அழுக்கு நீரைக் கையாளும் ஆலையை கட்டியமைத்துள்ளது என்று அவர் கூறினார்.
அதிர்ஷ்டமுள்ள வா இன மக்கள் மிக நீண்ட அடிமை சமூகத்தையும் நிலப்பிரபுத்துவ சமூகத்தையும் எதிர் கொள்ளவில்லை. தொழில்துறை காலத்தில் ஏற்பட்ட கடுமையான மாசுபடுத்தலையும் தீவிரமான போட்டியையும் அனுபவிக்கும் நிலை ஏற்படவில்லை. அவர்கள் நவீன பண்பாட்டை நேரடியாக அனுபவித்து வருகின்றனர். நவீனமயமாக்கச் சமூகத்தில் நுழைந்த போது, இயற்கைச் சூழல் நலனைப் பலிகொடுக்கவில்லை என்பதால், மரியாதைக்குரிய ச்சிமாங் மாவட்டம் மாபெரும் பதில் விலை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. சிறப்பான மலை, தூய்மையான நீர், இன்பமான வாழ்க்கை ஆகியவை வா இன மக்கள் சொர்க்கத்தைத் தேடுவதாகும். அத்துடன், உலக மக்களும் இந்தச்சொர்க்கத்தைத் தான் தேடுகின்றார்கள்.