யானையின் தடத்தைத் தேடுவது
யுன்நான் மாநிலத்தின் பூர் நகரில் லன்சான் லாஹு தன்னாட்சி மாவட்டத்தின் மங்குவான் கிராமம், கிழக்கு தானுப் ஆறு என்றழைக்கப்படும் லன்சான் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. லன்சான் ஆற்றுக்கு 600 மீட்டர் தொலைவிலுள்ள சிறிய கிராமம், மலைகள் மற்றும் ஆற்றினால் சூழப்பட்டுள்ளது. அதன் மக்கள் தொகை 2000க்கும் குறைவானது. கடந்த சில ஆண்டுகளாக, சில பெரிய விலங்குகள், விடியற்காலை மற்றும் மாலை நேரத்தில், இந்த கிராமத்துக்கு விருந்தினராக வருகை தருகின்றன.அவை மிகவும் செழுமையானவை. பெரிய காதுகள் உடையவை. இரு பெரிய பற்கள் உள்ளவை.
இந்த பெரிய விலங்குகள் குறித்து, மங்குவான் கிராமத்தின் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளக்கினர். சர்வதேச அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்கு வர்த்தக உடன்படிக்கையில் (Convention on International Trade in Endangered Species)சேர்க்கப்பட்ட சீனாவின் முதல் நிலை பாதுகாக்கப்பட்ட காட்டு விலங்கான ஆசிய யானைகள், தான் அவை.
சீனாவில் ஆசிய யானைகளின் எண்ணிக்கை, ராட்சத பாண்டாவை விட குறைவு. புள்ளிவிபரங்களின் படி, இவ்வெண்ணிக்கை 300க்குட்ப்பட்டவை. 1992ம் ஆண்டில் பூர் நகரில் முதல் யானை கண்டறிக்கப்பட்ட பிறகு, பூர் அரசு, பாதுகாப்பு மண்டலத்தை அமைப்பது, விளை நிலம் மீண்டும் காடாக மாற்றப்படுவதற்கு உதவுவது, வேட்டையாடுவதைத் தடுப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டதால், பூர் நகரின் இயற்கை சுற்றுச்சூழல் பெருமளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. சிம்பன்ஸி குரங்கு, ஆசிய யானை, இந்திய காட்டு எருமை உள்ளிட்ட பல வகை காட்டு விலங்குகள், பூர் நகருக்கு இடம்பெயர்ந்து வாழ்க்கின்றன. கடந்த 20 ஆண்டுகாலத்தில், ஆசிய யானை எண்ணிக்கை 80ஐத் தாண்டியுள்ளது.
ஆனால், முன்பு, ஆசிய யானைகள் மனிதருக்கு அப்பாலுள்ள காடு, புல்வெளி, பள்ளத்தாக்கு ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்தன. மனிதர்கள் வாழும் பகுதியில் தாக்குதல் நடத்துவது மிக குறைவு. விவசாயிகள், விளை நிலப்பரப்பை விரிவாக்கியதால், ஆசிய யானைகள் வாழும் இடப்பரப்பு குறைந்தது. மனிதனுக்கும் யானைக்குமிடையிலான மோதல் அடிக்கடி நிகழ்ந்தன. பூர் நகரின் வனத்தொழில் பணியகத்தின் காட்டு விலங்கு தாவரப் பாதுகாப்பு மற்றும் இயற்கை பாதுகாப்பு மண்டல நிர்வாக பிரிவின் பணியாளர் ஷு துங் மேய் கூறியதாவது—
மனிதனுக்கும் யானைக்குமிடையில், நேரடி மோதல் மட்டுமல்லாமல், விளை நிலங்களிலும் வாழ்கின்ற பிரதேசங்களிலும் மோதல்கள் நிகழ்ந்துள்ளன. எடுத்துக்காட்டாக, விவசாயிகள், விற்பனைக்காக தானியம் உற்பத்தி செய்த தானியத்தை யானைகள் உண்டு விட்டன. இதனால், மக்கள் யானைகளின் மீது பகைமையைப் பாராட்டினர். மனிதன் போன்று யானைகள் வாழவும் உணவு தேவை. உணவு, அவற்றின் வாழ்வின் அடிப்படையாகும் என்றார் அவர்.
பல இடங்களில், விளை நிலம் மீண்டும் காடுகளாக மாற்றப்படுவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று ஷு துங் மேய் கூறினார். ஆனால், மக்கள் தொகை அதிகரிப்பதாலும், விளை நிலப்பரப்பை விரிவாக்குவதாலும், ஆசிய யானைகள் வாழும் நிரப்பரப்பு குறைந்து விட்டது. வேறுவழியில்லாமல், அவை, தான் வாழும் பகுதிகளிலிருந்து மனிதர் வாழும் பகுதிகளுக்கு வந்து, உணவைத் தேடுகின்றன. உணவு தோடும் போக்கில், யானைகள் விவசாயிகளின் வீடுகளை அழிக்கின்றன.