மங்குவாங் கிராமத்தை, 5 பகுதிகளாகப் பிரித்து, 6 கண்காணிப்பாளர்களைச் நியமித்துள்ளோம். இந்த 6 கண்காணிப்பாளர்கள் தனித்தனியாக அவரது பொறுப்புப் பகுதியில் யானைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பர். வேறு பகுதிக்கு சென்றால், அந்த பகுதிக்குப் பொறுப்பு ஏற்கும் கண்காணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும் என்றார் அவர்.
கண்காணிப்பாளர்கள், நாள்தோறும் உலக நிலைப்பாடு அமைப்பின் மூலம், யானைகள் உணவுகளை சாப்பிடும் இடங்களையும் நேரங்களையும் உணவு வகைகளையும் பதிவு செய்ய வேண்டும். அவை, தானியங்களை உண்டு பாதிப்பு ஏற்படுத்துகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால் விவசாயிகளுக்கு அறிவிக்க வேண்டும் என்று சாவ் சி தாவ் கூறினார்.
மங்குவாங் கிராமத்தில், தானியங்களையும் வணிகப் பயிர்களையும் விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர். தவிரவும், யானைகளுக்குப் பிடிக்கும் வாழைப்பழங்களையும் மக்காச்சோளங்களையும் விவசாயிகள் பயிரிடுகின்றனர். யானைகள், பிடித்த உணவுகளைச் சாப்பிட்டால், விவசாயிகள் தங்களது தானியங்களை பாதுகாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.