யானையைப் பாதுகாப்பதற்கான சாதனங்கள்
புள்ளிவிபரங்களின் படி, கடந்த சில ஆண்டுகளில், ஆசிய யானைகள், பூர் நகரில் ஏற்படுத்திய பொருளாதார இழப்பு ஆண்டுக்கு 70 இலட்சம் யுவானாகும். காட்டு விலங்குகள் ஏற்படுத்திய பொருளாதார இழப்பில் இவ்வெண்ணிக்கை 90 விழுக்காடு வகிக்கிறது. சட்டப் படி, காட்டு விலங்குகளால் ஏற்பட்ட இழப்புக்கு அரசு ஓரளவு மீட்புதவி வழங்கும். ஆனால் இந்த மீட்புதவி தொகை, இழப்பின் 10 விழுக்காட்டுக்கும் குறைவானது. உள்ளூர் விவசாயிகள் இது குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மனிதனுக்கும் யானைக்குமிடையிலான மோதல் தீவிரமாகி விட்டது.
2008ம் ஆண்டு முதல், பூர் நகராட்சி, காட்டு விலங்குகளால் ஏற்பட்ட இழப்புக்கு மீட்புதவி சோதனையை மேற்கொண்டு, இம்மீட்புதவி தொகையை அதிகரித்தது. குறிப்பாக, யானைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஸ்மோ, லன்சான் இரு நகரங்களின் வனத்தொழில் பணியகங்கள் 2010ம் ஆண்டு முதல், காட்டு விலங்குகளால் ஏற்பட்ட இழப்பு குறித்து காப்புறுதி நிறுவனங்களுடன் உடன்படிக்கையில் கையொப்பமிட்டன. உடன்படிக்கையின் படி, காட்டு விலங்கு 100 யுவான் மதிப்புள்ள இழப்பை ஏற்படுத்தினால், காப்புறுதி நிறுவனம் 90 யுவான் மீட்புதவி வழங்கும். இழப்பு மதிப்பு 10000 யுவானை எட்டினால், காப்புறுதி நிறுவனம் 9900 யுவான் வழங்கும். 2012ம் ஆண்டு, பூர் நகரம் காப்புறுதி நிறுவனத்துடன் 55 இலட்சம் யுவான் மதிப்புள்ள உடன்படிக்கையை உருவாக்கியது.
மங்குவான் கிராமத்தின் காப்புறுதி நிறுவனத்தின் பணியாளர் வாங் யுங் சிங் கூறியதாவது—
கடந்த ஆக்ஸ்ட் முதல் செப்டம்பர் திங்கள் வரை, நான் ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 700 யுவான் மதிப்புள்ள காப்புறுதித் தொகையை வழங்கியுள்ளேன். இந்த இழப்புத் தொகையில், தானியம், வாழைப்பழம், சோளம் உள்ளிட்ட வேளாண் உற்பத்திப் பொருட்களும் அடங்கும். முதலில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். காப்புறுதி நிறுவனம் கோரிக்கையைக் கையாண்டு விட்டு, தகவலை என்னிடம் அனுப்பியது. இத்தகவலின் படி, பாதிக்கப்பட்ட விவசாயி வீட்டுக்குச் சென்று உறுதிப்படுத்திய உண்மையான நிலைமையை காப்புறுதி நிறுவனத்துக்கு அனுப்புவேன். காப்புறுதி நிறுவனம் வழங்கிய சரியான மீட்புதவி தொகையை நான் விவசாயிகளுக்கு ஒப்படைப்பேன் என்றார் அவர்.
இந்த மீட்புதவி, விவசாயிகளுக்கு மனநிறைவு தந்துள்ளது. மங்குவான் கிராமத்தின் விவசாயி லியு தா கூறியதாவது—
முன்பு, விவசாயிகள், ஆசிய யானைகள் கிராமத்துக்கு வந்து தானியங்களை உண்பதைப் பார்த்தால், அவற்றை விரட்டி அடித்தனர். ஆனால், இப்போது அப்படி செய்யாமல், அவற்றை பாதுகாக்கின்றனர். நாங்கள் கடினமாக உழைப்பதன் மூலம், பயிரிட்ட தானியத்தை ஆசிய யானைகள் உண்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஊரிலுள்ள குழந்தைகளுக்கு ஆசிய யானைகளை மிக பிடிக்கும். ஆசிய யானைகள் நட்புறவை காட்ட விரும்புகின்றன. அவைகள் குழந்தைகளின் மீது எப்போதுமே தாக்குதல் நடத்தாது என்றார் அவர்.
யானை, உலகில் மிக பெரிய தரை விலங்கு ஆகும். யானைகள் மனிதனைச் சந்தித்தால், அஞ்சும். குடும்பத்தினரைப் பாதுகாப்பதற்காகவும் தற்காப்புக்காகவும் ஆசிய யானைகள் அடிக்கடி மனிதனின் மீது தாக்குதல் நடத்தும். மனிதனுக்கும் யானைகளுக்குமிடையிலான மோதலை தடுக்கும் வகையில், பூர் நகராட்சி, அனைத்துலக விலங்கு பாதுகாப்பு நிதியத்துடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு, ஆசிய யானைகள் அடிக்கடி காணப்படும் பிரதேசங்களில், கண்காணிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு, மனிதனுக்கும் யானைகளுக்குமிடையிலான மோதல்கள் பயன்தரும் முறையில் தடுக்கப்பட்டன. கண்காணிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ள பூர் நகராட்சி வனத்தொழில் பணியகத்தின் காட்டு விலங்கு தாவரப் பாதுகாப்பு பிரதேச பிரிவின் துணை தலைவர் சாவ் சி தாவ் விளக்கினார்.