ஓலைச்சுவடிப் படைப்புக் கலை இந்தியாவில் தோன்றியது. 7ஆவது நூறாண்டில் இது சீனாவின் யூனான் மாநிலத்தின் தைய் இன வசிப்பிடத்துக்கு பரவி, தைய் இனத்தின் புத்த மதக் கோயில்களில் பொதுவாக இத்தகைய படைப்புகளைப் பாதுகாக்கும் சிறப்பு இடம் உள்ளது. உள்ளூர் செவிவழி கதைகளின் படி, பண்டைக்காலத்தில் மொத்தம் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓலைச்சுவடிப் படைப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளன. தற்போது, சிஷுவாங்பான்னா பிரதேசத்தில் சுமார் 3000 ஓலைச்சுவடிப் படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. தவிர, நாட்டுப்புறப் பிரதேசத்தில் மிக அதிக படைப்புகள் உள்ளன.
சிஷுவாங்பான்னா பிரதேசத்தில் காங்லாஞ்சோ என்பவர் ஓலைச்சுவடிகளைத் தயாரிக்கும் கலைஞராவார். அவருடைய வீட்டின் வாசலில் ஒரு மர வில்வளைவு தொங்கவிடப்பட்டுள்ளது. ஓலைச்சுவடிப் படைப்புத் தயாரிப்புக் கலைப் பள்ளி என்று இதில் எழுதப்பட்டுள்ளது. காங்லாஞ்சோவுக்குக் கிட்டத்தட்ட 80 வயது. அவர் கூறியதாவது
கான்லான்பா எனும் பிரதேசத்தில் 1934ஆம் ஆண்டு பிறந்தேன். 12 வயதின் போது, தைய் இனத்தின் பாரம்பரியத்தைப் பின்பற்றி நான் கோயிலுக்குச் சென்று துறவியாக மாறினேன். முதல் ஆண்டில் தைய் இன எழுத்துக்களில் எழுத்து கல்வி பெற்றேன். பிறகு ஓலைச்சுவடிப் படைப்புகளைத் தயாரிப்பது பற்றி கற்றுக்கொண்டேன் என்றார் அவர்.