அயரா முயற்சி மூலம் 21 வயதில், அவர் துறவிகளின் ஆசிரியராக மாறினார். அதேவேளையில் பல ஓலைச் சுவடி படைப்புகளை அவர் தயாரித்துள்ளார். தைய் இனத்தின் பாரம்பரியத்தின் படி, 25 வயதில் அவர் கோயிலிருந்து விலகி திருமணம் செய்து கொண்டார். கடந்த 60க்கும் மேலான ஆண்டுகளில் அவர் தொடர்ந்து ஓலைச் சுவடி படைப்புகளைத் தயாரித்து வருகின்றார். தயாரிப்பு முறை பற்றி அவர் எங்களிடம் எடுத்து கூறினார்.
பனை மர ஓலை சிஷுவாங்பான்னா பிரதேசத்தில் தனிச்சிறப்புடைய ஒரு வகை மர இலையாகும். படைப்புகளை எழுதுவதற்கு முன், இந்த இலைகளை எலுமிச்சைப் பழத்துடன் சுமார் 10 மணி நேரமாக வேகவிட வேண்டும். பிறகு இலைகளின் பச்சை பகுதியை நீக்கி, சுத்தம் செய்து காய வைக்க வேண்டும். பிறகு, அவற்றில் எழுதலாம். இத்தகையவாறு தயாரிக்கப்பட்ட பனை ஓலைச்சுவடி படைப்புகளை நீண்டகாலம் வைத்திருக்கலாம். நீரில் அமிழ்ந்தினால், அவற்றிலுள்ள எழுத்துக்கள் இன்னும் தெளிவாக உள்ளன என்றார் அவர்.
எமது செய்தியாளருக்கு அவர் ஓலைச்சுவடிகளில் எழுதும் கலையைக் காண்பித்தார். முதலில், இரும்புருக்கு ஊசியைக் கொண்ட ஒரு மர பேனா கொண்டு அவர் இலையில் எழுதினார். அடுத்து, இலையை மேசையில் வைத்து, அதன் மேல் நிறைய மை கொண்ட துணிமூலம் மேற்பூசினார். பிறகு, ஒரு தூய்மையான துணி மூலம் மேலும் ஒரு முறை பூசினார். அற்போது, ஓலைச்சுவடியில் தெளிவான தைய் இன எழுத்துக்கள் காணப்பட்டன.
இத்தகைய மை, தாவர எண்ணெய், Boiler ash ஆகிய இரண்டால் தயாரிக்கப்படுகிறது. ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட எழுத்துக்கள் உறுதியானவை என்று அவர் கூறினார்.