பொதுவாக 10க்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ஓலைச்சுவடி தயாரிப்புக்குச் சுமார் 5,6 நாட்கள் தேவை. காங்லாஞ்சோ ஆண்டுக்கு கிட்டத்தட்ட 1000 பக்கங்களுடைய ஓலைச்சுவடி படைப்புகளைத் தயாரிக்கின்றார். அவர் தயாரித்த ஓலைச்சுவடி படைப்புகள் யூனான் மாநில அருங்காட்சியகத்திலும், சிஷுவாங்பான்னா பிரதேச அருங்காட்சியகத்திலும் சேகரிக்கப்பட்டுள்ளன.
தற்போது, கால முன்னேற்றம் மற்றும் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியுடன், இப்பிரதேசத்தில் கோயில்களில் துறவிகளைத் தவிர, காங்லாஞ்சோவைப் போன்ற ஓலைச்சுவடிப் படைப்புக் கலைஞர்கள் மிகமிகக் குறைவு.
தைய் இனத்தின் ஓலைச்சுவடிப் படைப்புக் கலை 2008ஆம் ஆண்டு சீனாவின் 2வது தேசிய நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களில் சேர்க்கப்பட்டப் பின், உள்ளூர் அரசும் வெளியீட்டகமும் ஒத்துழைத்து, சீனாவின் ஓலைச்சுவடிப் படைப்புகளின் முழுத் தொகுதியை வெளியிட்டன என்று சிஷுவாங்பான்னா சோ பண்பாட்டகத்தின் தலைவர் துவான் ச்சிலு கூறினார். மொத்தம் 100 படைப்புகளில் 114 புத்தகங்கள் உள்ளன.
ஓலைச்சுவடிப் படைப்புக் கலையைப் பாதுகாத்து பரவல் செய்ய, 2010ஆம் ஆண்டு முதல், சிஷுவாங்பான்னா சோ பண்பாட்டகத்தில் 5 சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்தியது. மொத்தம் 240 பேர் இதில் பயிற்சி பெற்றனர். இந்தப் பண்பாட்டகத்தின் தலைவர் துவான் ச்சிலு கூறியதாவது
சீனப் பண்பாட்டு அமைச்சகம் வழங்கிய உதவித் தொகையுடன் மார்ச் திங்களில் புதிய பயிற்சி வகுப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மேலும் ஓலைச்சுவடிப் படைப்புக் கலையை பரவல் செய்வதில் ஈடுபட்டிருப்போருக்கு பரிசுகள் வழங்குவோம். அவர்களுக்கு மேலும் ஊக்கமளிக்க வேண்டும். பயிற்சி வகுப்புகளில் காங்லாஞ்சோவை முதன்மை ஆசிரியராக நியமிக்கின்றோம். அவரது தொழில் நுட்பம் பாராட்டத்தக்கது என்று இந்த அலுவலர் கூறினார்.