திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் பல மதிப்புள்ள வரலாற்று தொல் பொருட்களும் பண்டைக்கால கட்டிடங்களும் உள்ளன. திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ள 50 ஆண்டுகளில், தொல் பொருட்களைப் பாதுகாத்து சீரமைத்து பராமரிக்க சீன அரசு, தொடர்ந்து நிதியை ஒதுக்கி வருகின்றது. போத்தலா மாளிகை, திபெத் தேசிய இனக் கட்டிடக் கலைப்பாணியின் முக்கிய கட்டிடமாகும். அது, திபெத் தேசிய இனக் கலையின் கருவூலமுமாகும். அது, உலகப் பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.